பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30s மலைப்பிளவுகளையும் குகைகளையுமுடைய மலைப் பக்கத்தே கிளை தழைத்து நிற்கும் சந்தனக்கட்டையும், புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானைக் கொம்பு மாகிய மூன்றையும், மிக்க நிறம் பொருந்திய வலிய புலி யினுடைய வரியமைந்த தோலின்மேற் குவித்து விருந் தினர்க்குக் கொடுக்கும் தன்மையர் ஆய் நாட்டு மக்கள்10 என்று புலவர் ஒருவரால் விருந்தோம்பலின் தன்மை பேசப்படுகிறது. குறவர் வாழ்வு சேரநாடு மலைநாடாகையால், அங்கு வாழ்ந்த மக்கள் குறிஞ்சி நில மக்கள் அல்லது குறவர் என அழைக்கப் பட்டனர். இம் மக்கள் குறிய இறப்பையுடைய சிறிய மனையின் கண், வளைந்த மூங்கிற் குழாயின் கண் வார்த் திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து வேங்கை மரத்தை யுடைய முற்றத்தின் கண், பொன்னாற் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடனே, மிசையே அசைந்த தலையினையுடைய பனந்தோட்டைச் செருகி , சினத்தை யுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தயர்வர் என்று குறவர் வாழ்வு குறிப்பிடப்படுகிறது. யானை பிடிக்கும் முறை இவர்கள் மலைவாசிகளாகையால், மலைகளில் மிகுதி யாகத் திரியும் யானைகளைப் பிடிப்பதும் இவர்களுடைய தொழில்களுள் ஒன்றாகும். அதற்கு இவர்கள், யானை வரும் வழியில் ஆழ்ந்த பள்ளஞ் செய்து அதன்மேல் மெல்லிய கழிகளைப் பரப்பி மணலைக் கொட்டி பொய்யே நிலம் போலத் தோன்றச் செய்து வைப்பர். அதனை யறியாது வரும் யானை அப்பள்ளத்தில் வீழ்ந்துவிடும். 10. புறநானூறு; 374 : 11-15. 11. , 129 : 1-3. 12. Ho Ho 22 : 20-22. சே. செ. இ-20