பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பின்னர்ப் பழகிய யானைகளைக் கொண்டு அதனைக் கொள்வர். இவ்வாறு யானைகளைப் பிடிக்கும் முறை ஒரு பாடலில் கூறப்படுகிறது. புலவர்களின் நிலை அக்காலத்தில் புலவர்கள், புரவலர்களால் பெரிதும் போற்றப்பட்டாலும்; புலவர்கள் வாழ்க்கை வறுமையான வாழ்க்கையாகவே இருந்து வந்தது என்பது புறநானூறு காட்டும் உண்மை. ஒரு புலவர் உண்மையின் உடம்பு புலர்ந்து, கண் தெளிந்த நீரால் நிறைந்து, வியர்ப்புற்ற எனது பல சுற்றத்தோடு, பசிநோய் வருத்தும் பகை என்றும், மற்றொரு புலவர் நாடோறும் உணவில்லாமை யான் இடந்தோறும் இடந்தோறும் மாறி அகழ்தலால், இல்லெலி மடிந்த பழைய சுவராகிய எல்லையையுடைய, பாலில்லாமையாற் பலபடி சுவைத்து முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனே மனையின்கண் வறுமையுற்றி ருந்த எனது மனையாள் என்றும் தமது பாடலில் வறுமை நிலையினைக் குறிக்கின்றனர். வறுமையிலும் செம்மை எனவே தம் வறுமையைப் போக்க வேண்டி, கொடையிற் சிறந்த பல புரவலரிடம் சென்று தம் வறுமை கூறி நிற்பர். அப்புரவலன் தக்க பரிசில் நல்காவிடினும் பரிசில் கொடுத்ததற்குக் காலம் தாழ்க்கினும், தான் பரிசில் வேண்டிச் சென்றதையும் மறந்து, மானமேலிட்டால் திரும்பி விடுவர் என்பது மரத்தைத் துணிக்கும் தச்சன் பயந்த மழுவுடைய கைத்தொழில் வல்ல மகார், காட்டிடத்துச் சென்றால் அக் காட்டகம் பயன்படுமாறு 13. புறநானூறு 17 : 14.19 14. 6-9 : 136 ככ. 15. 33. 211 : 17-22.