பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307 அவர்க்கு எத்தன்மைத்து; எமக்கும் யாதொரு திசைக்கட் போகினும் அத்திசைக்கண் சோறு அத்தன்மைத்து: என்ற ஒளவையார் பாடலும்', 'கண்ணாற் பருகுவது போலும் விருப்பமில்லாதவிடத்து, தம்மருகே கண்டு வைத்தும் கண்டறியாதார்போல உள்ளம் மகிழ வாராத தம்முகம் மாறித் தரப்பட்ட பரிசிலை, பிறிதோரிடத்துச் செல்ல முயலும் முயற்சியில்லாதோர் விரும்பாரல்லர்; இங்ங்னம் வருவீராகவென்று எதிர்கோடல் வேண்டும். தரமுடையார்க்கு உலகம் பெரிது; விரும்புவோரும் பலர். ஆதலால் மறம் பொருந்திய வலியையுடைய யாளியை யொப்ப, உள்ளம் மேற்கோளின்றித் தணியாது; உள்ளுரக் கனியாத வலிய பழத்தின் பொருட்டுச் சுழல்வோர் யார்தாம்!' என்ற பெருஞ்சித்திரனார் பாடலும், 17 புலவர்களின் மான வாழ்க்கையையும், பெருமித வாழ்க்கை யையும் எடுத்தியம்புகின்றன. தமிழ்ப் புலவரிடம் அரசன் அன்பு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் உடைய தமிழகத்தில், குருதிப்பலி கொள்ளும் விழுப்பத்தை யுடைய உட்குப் பொருந்திய வீரமுரசம் வைப்பதற் கென்று இருந்த முரசுகட்டிலில், அஃது முரசுகட்டில் என்று அறியாது அதில் படுத்து உறங்கிய மோசிகீரனார் என்னும் புலவரை, யாவரையும் போலக் குற்றம் புரிந்தவர் என்று கருதி வாளால் இருசுறு படுத்தாது. அங்ங்னம் படுத்துறங்கியவர் தமிழ்ப்புலவர் என்பதை யறிந்ததால், தண்டனைக்கு அவரை உட்படுத்தாதது மட்டுமில்லாமல், அவர் அருகே அமர்ந்து களைப்புத் திருதற்பொருட்டு சாமரம் வீசிப் பணி செய்தான் ஒர் அரசன்: இதனால் 16. புறநானூறு: 206 : 6-13. 17. if I 207 : 2-11. 18. # 5. 50 : 7-13.