பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பல்லா னன்னிரை புல்லருங் துகளப் பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற் பெரும்பல் யாணர்க் கூலங் கெழும. -ஒன்பதாம் பத்து; 9:1-7. இவ்வாறு சேரநாடு நானில வளமும் நன்கு சிறந்து, இயற்கை எழிலும் பூத்துங் குலுங்கிக் கவினார் காட்சி வழங்கியது என்பதனைப் பதிற்றுப்பத்தின் பாடல்கள் பலவும் எடுத்து மொழிகின்றன. பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் சேரலாதன் என்பது சேர வேந்தரின் குடிப்பெயர் ஆகும். குட்டநாட்டு வஞ்சி நகரைத் தலைநகரமாகக் கொண்டு சேரநாட்டை ஆண்ட மன்னர்களுள் இவ் வேந்தனே பழைமையானவனாகக் கருதப்படுகின்றான். சேரர்களில் பெருஞ்சேரலாதன் என்றும் நெடுஞ்சேரலாதன் என்றும் பெயர்கள் காணப்படுதலால் சேரலாதன் என்ற பெயரினைப் பொதுவாகக் கொள்ளலாம். சேரலாதன் என்பது சேர வேந்தனான ஆதன் என்று பொருள்படுகிறது என்றும், எனவே சேரமான் ஆதன் என்பான் வழிவந்தவரே சேரலாதன் என்ற பெயருடையோர் ஆவர் என்றும் நன்கு விளங்கும் என்பர் ஆய்வாளர்." முதலாம் பத்திற்குரிய சேரமன்னன் பெருஞ்சோற்று. தியன் சேரலாதனே என்பர். ஆயினும் அப்பத்து இன்று கிடைக்காமையினால் இவனது வரலாற்றினை விளங்கக் காண முடியவில்லை. புறநானூற்றின் இரண்டாவது பாடல் இவனைப் பற்றியதாகும். முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் பெருமான் இவ்வேந்தனைப் பாடியுள்ளார். இப்பாட்டு இவன் பாரதப் போர் நடந்த காலத்துப் பாண்டவர் கெளரவர் ஆகிய இரு திறத்துப் படையினர்க்கும் பெருஞ்சோறு வழங்கியதாகக் குறிப்பிடுகின்றது. அப்பகுதி வருமாறு: 32. திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, பண்டை. நாள்ைச் சேர மன்னர் வரலாறு, ப. 61.