பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 அரசர்கள், தமிழ்ப் புலவர்களிடம் எத்தகைய அன்புகொண் டிருந்தனர் என்பது தெரிகிறது. பரிசில்பெற்ற புலவர் மற்றவரையும் ஆற்றுப் படுத்துதல் சேரன் கோக்கோதை மார்பனிடம் பரிசில் பெற்று வந்த புலவர், தன்னெதிர்ப்பட்ட புலவரிடம் கோதை யுடைய மார்பிற்கணிந்த கோதையானும், அக்கோதை யைப் புணர்ந்த மகளிர் சூடிய கோதையானும், கரிய கழியின் கண் மலர்ந்த நெய்தற்பூவானும், தேன்நாற. நிற்கும் கானலையுடைய தொண்டியின் தலைவனாகிய எம்மரசனிடம் நீவிர் செல்வீராயின், முதிய வாய்மையை யுடைய இரவல; நீ அமரிக்கண் மேம்படுங் காலத்து, நினக்கு உளதாகிய புகழை மேம்படுத்துமவனைக் கண்டேம் யாமெனச் சொல்லி என்று ஆற்றுப்படுத்தும் பெருந் தன்மை யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதையே குறிக்கிறது. இங்ங்னம் பிறரால் ஆற்றுப்படுத்தப்பட்ட பாணனும், பாடினியும் அரசனது வீரத்தைப் பாடி, தோற்றப் பொலிவுடைய சிறந்த பல கழஞ்சால் செய்யப்பட்ட, நன்மையையுடைய அணிகலத்தையும், விளங்கிய தழலின் கண்ணே ஆக்கப்பட்ட பொற்றாமரையாகிய வெள்ளி நாரால் தொடுத்த பூவையும் பெற்றனர்.49 புலவரின் செல்வாக்கு

எம்முடைய இறைவன் இருந்த ஒசையையுடைய பழையவூரிடத்து அதனையுடையவர்களைப்போல, காலம் பாராது அணுகி தலைமையுடைய நாளோலக்கத்தின் கண்ணே தலையெடுத்துச் செம்மாந்து சென்று புகுதல்,

19. புறநானுாறு 48 : 5-9. 20. 15 11 : 10-18.