பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 எம்மைப் போலும் வாழ்க்கையுடைய இரப்போர்க்கு எளிது? என்று ஒரு புலவரின் கூற்றிலிருந்து, புலவர்களின் செல்வாக்கு நன்கு புலப்படுகின்றது. அரசன் இறந்தபின் கையற்றுப் பாடுதல் தன்னைப் பல்லாற்றானும் போற்றிய புரவலன் இறந்துபட்டால், புலவர் தன் நிலையை எண்ணி, மன்னனின் நிலைக்கு இரங்கிக் கையற்றுப் பாடுவர். அதியமான் நெடுமானஞ்சி இறந்தபோது, ஒளவையார், வெட்டிச் சுட்ட கொல்லை நிலத்துக் குறவனால் தறிக்கப் பட்ட துண்டம் போன்ற, கரிந்த புறத்தையுடைய விறகால் அடுக்கப்பட்ட ஈமத்தின் கண் எரிகின்ற ஒள்ளிய அழலின் கண் உடல்சுடச் சென்று அணுகினும் அணுகுக; அவ்வாறு அணுகாது போய், வறிதே ஆகாயத்தை உற ஓங்கினும் ஓங்குக; குளிர்ந்த சுடரையுடைய மதிபோலும் வெண் கொற்றக் குடையையுடைய ஒள்ளிய ஞாயிற்றையொப் போனது புகழ் மாயா' என்றும், எமக்ஃகம் பற்றாகிய எம்மிறைவன் எவ்விடத்துள்ளான் கொல்லோ; இனிப் பாடுவாரும் இல்லை, பாடுவார்க் கொன்றிவாரும் இல்லை 23 என்றும் கையற்றுப் பாடுகிறார். மற்றொரு பாடலில் ஆய் இறந்தவுடன், குட்டுவன் கீரனார், ஒள்ளிய தீச்சுட உடம்பு மாய்ந்துவிட்டது; பொலிவிழந்த கண்ணினை யுடையவராய், தம்மைப் பாதுகாப்போரைக் காணாது, ஆரவாரிக்கும் கிளையுடனே செயலற்று அறிவுடையோர் தம் மெய்யுணங்கிய பசியையுடையவராய், இனிப் பிறருடைய நாட்டின்கண் தலைப்படும் போக்கை யுடையவராயினார் என்று கையற்றுப் பாடுதலையும் காணலாம். 21. புறநானூறு, 54 : 1.4. 22. * 5 231 : 1-6. 23. 16-17 : 235 ג כ. 24. 14–10 : 240 תות.