பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 இறந்தபின் எரித்தல் - கள்ளி வளரப்பட்ட புறங்காட்டுள், வெள்ளிடையில் மூட்டிய தீயை விளைக்கும் சிறிய விறகையுடைய படுக்கை யின்கண் ஒள்ளிய அழலாகிய பாயலின் கண்ணே பொருந்தப் பண்ணி மேலுலகத்தே போயினாள் மடவாள்' என ஒரு பாடலில் குறிக்கப் பெறுவதால், இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் இருந்தது எனத் தெரிகிறது. வாணிபம் உள்நாட்டு வாணிபமேயன்றி, கடல் கடந்து தோணி களில் சென்று வெளிநாட்டு வாணிபமும் மேற்கொண் டிருந்தனர் சேரநாட்டு மக்கள். தாம் பெற்ற உப்பைக் கொடுத்து, அதற்கு ஈடாக நெல்லையும், தோணி நிறைய மிளகு மூட்டையைக் கொண்டு சென்று, அதற்கு ஈடாகப் பொன்னையும் பெற்று வந்தனர்' என்பது ஒரு பாடலால் அறிய வருகிறது. விஞ்ஞான அறிவும், வான சாத்திர அறிவும் அணுச்செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தடவிவரும் காற்றும், அக்காற்றின் கண் தலைப்பட்ட தீயும், அத்தியோடு மாறு பட்ட நீருமென இயற்கை ஐம்பெரும் பூதங்களால் ஆக்கப் பட்டது என்றும்,27 திசைகள் காற்றினால் இயங்கும்; ஆகாயம் காற்றில்லாத வெற்றிடம் எனவும் கூறப்படுவ தால், மக்கள் விஞ்ஞான அறிவும், வானசாத்திர அறிவும் ஒருங்கே உடையவராயிருந்தனர் எனத் தெரிகிறது. 25. புறநானுாறு; 245 : 3-5. 26. 1 : 343 : 1-6. 27. 5 : 2 : 1-6. 28. 3-4 : 20 כל.