பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311 நாள்கோள் அறிவு மேடவிராசி பொருந்திய கார்த்திகை நாளில் முதற் காலின்கண், நிறைந்த இருளையுடைய பாதியிரவின்கண் முடப்பனை போலும் வடிவையுடைய அனுடநாளில் அடியின் வெள்ளி முதலாக கயமாகிய குளவடிவுபோலும் வடிவையுடைய புனர்பூசத்துக் கடையில் வெள்ளி எல்லை யாக விளங்க, பங்குனி மாதத்தினது முதற் பதினைந்தின் கண் உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய, அதற்கு எட்டாம் மீனாகிய மூலம் அதற்கெதிரே எழா நிற்க, அந்த உத்தரத்திற்குமுன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய நாண்மீன் துறையிடத்தே தாழக் கீழ்த்திசையிற் போகாது, வடதிசையிற் போகாது கடலாற் சூழப்பட்டது பூமிக்கு விளக்காக, முழங்காநின்ற தீர்ப்பரக்க, காற்றால் பிதிர்ந்து கிளர்ந்து ஒருமீன் வானத்தினின்றும் வீழ்ந்தது: என்று கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இறந்த நாளைக் குறிக்கப் புலவர் ஒருவர் பாடுகிறார். இதனான் பங்குனித் திங்களில் நட்சத்திரம் விழின் இராசபீடை" என்று கருதப்பட்டது என்பதும், நாள், கோள் பற்றிய அறிவில் மக்கள் தேர்ந்திருந்தனர் என்பதும் அறியப் படுகின்றன. மேற்கூறியவையே யன்றி, சேர மகளிர் கடற்கரை மணலால் பாவை செய்தும், பாவைக்குப் பூவினால்அலங் கரித்தும், புனல் பாய்ந்து விளையாடியும்,89 பொழுது போக் குவர் என்பதும், புலால் நாற்றத்தையுடையவாகிய செவ் விய தடியைப் பூ நாற்றத்தலாகிய புகையைக் கொளுத்தி அமைந்த ஆனையும், துவையையும், கறியையும், சோற்றை யும் உண்ணும் வழக்கமுடையவர் மக்கள் என்பதும்,

  • =

29. புறநானூறு 229 : 1.12. 30. * 5 11 : 1-5. 31. J. : 14 : 12-14.