பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 கணையமரத்தை முறித்து, இரும்பாற் செய்யப்பட்ட அழகு செய்த அங்கு சத்தால் முன்னர்க் கடாவி, அது செய்யும் வினையைப் பின் வேண்டுமளவிலே பிடிக்கவும், வலிய நிலத்தைக் குந்தாலியால் இடித்துச் செய்த குழிந்த இடங்கின் கண் நீர்ப்பரப்பிதுன. ஆழமாகிய உயர்ச்சியைக் கருதி அதன்கட் செல்லாமல் மிகைத்த செலவினையுடைய குதிரையைக் குசைதாங்கி, வேண்டுமளவிலே பிடிக்கவும், அம்பறாத்துரணி பொருந்திய முதுகையுடையராய், தேர் மேலே நின்று, வில்லினது வலிய நாணாற் பிறந்த வடுப் பொருந்தும்படி அம்பைச் செலுத்தவும், வீரப்போர் புரிவர் என்று ஒரு பாடல் போர்நிலையைப் பற்றிக் குறிக்கின்றது. யோருக்குச் செல்லும் நிலை போருக்குச் செல்லும்போது மன்னன், கையில் வேலையும், காலில் வீரக் கழலையும், உடம்பின்கண் வேர்ப்பையும், மிடற்றின்கண் ஈரம் புலராத பசிய புண்ணையும், பகைவர் தொலைதற்கேதுவாகிய வளரும் இளைய பனையினது உச்சிக்கண்ணே வாங்கிக்கொள்ளப் பட்ட ஊசித்தன்மையைப் பொருந்திய வெளிய தோட் டையும், வெட்சியினது பெரிய மலரை வேங்கையொடு விரவியும், சுருண்ட கரிய மயிர் பொலிவுறச் சூடியும், சினத்தையுடைய கண்ணனாய்ப் புறப்பட்டுச் செல்வன்சி" என்று அதியமானின் போர்க்கோலத்தை ஒளவையார் காட்டுகின்றார். இங்ங்னம் சினத்துடன் சென்று, அம்போடு வேல் தைத்து உருவுமிடமாகிய போர்க்கள முழுதும் தானே சென்று நிற்பன். அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண் துளையையுருவி, இரப் 39. புறநானூறு 14:1-9. 40. 3 :) 100 : 1-6.