பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 போர் கையுள்ளும் தைத்துருவி தன்னாற் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய கண்ணிற் பாவை ஒளிமழுங்க அழகிய சொல்லை ஆராயும் நுண்ணிய ஆராய்ச்சியை யுடைய அறிவினையுடையோர் நாவின்கண்ணே போய் வீழ்ந்தது, அவனது அரிய மார்பகத்தில் தைத்த வேல்.' இது காஞ்சித் திணைக்குரிய துறைகளுள் இன்னனென் றிரங்கிய மன்னை' என்ற துறையின் பாற்படும். மற்றொரு பாடலில் தன்னைக் குறித்துவரும் மாற்றார் படையை எதிரேற்றற்குக் கிளர்ந்தெழும் மாலையணிந்த மார்பைத் தம்முடைய அரிய கடனையாற்றுதல் வேண்டிப் பகைவர் எறிதலால் அம்பும் வேலும் மொய்த்து உடம்பும், கட்டினாகாத உயிரும் கெட்டன42 எனக் கூறப்படுவ தால், இது செஞ்சோற்று நிலை" என்னும் துறையின் பாற்படும். அதியனின் வீரம் அதியமானின் வீரத்தைப் பாராட்டும் ஒளவையார், நெடுமான் அஞ்சியேந்திய வாள்போரில் உழந்து உருவிழந் துளது; மேல்மடை கலங்கி நிலை திரிந்துளது; களிறுகள் பகைவர் களிற்றுத் திரளொடு பொருது தொடி கழிந் துள்ளன; குதிரைகள் போர்க் களக் குருதியிற் றோய்ந்து குளம்புகள் மறுப்பட்டுள்ளன; அவன் பகைவர் எறிந்த அம்புகளால் துளையுண்ட கேடயத்தை வைத்துள்ளான் . அவனொடு போர்புரிந்து வெற்றிபெறுவார் ஒருவரும் இல்லை. அதியனது யானைப் படையைக் கண்ட பகை வேந்தர் தத்தம் மதில் வாயில்கட்குப் பழைய கதவுகளை மாற்றிப் புதுக்கதவுகளை நிறுத்திப் புதிய கணைய மரங்களை அமைக்கின்றனர்; குதிரைப் படையைக் கண்டவர் காவற்காட்டின் வாயில்களைக் க ைவத்த வேல: 41. புறநானூறு; 2235 : 10.15. 42. 15. k82 : 4-9. 43. 5 : 97 : 1-17.