பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 ஒச்சுந் தோறும் உடன்றெழும் பாம்புபோலச் சீறியெழும் வீரரும், மன்றிக்கண் கட்டப்பட்ட போர்ப்பறை காற்றால சைந்து இசைக்குமாயின் போர் வந்துவிட்டது போலும்' என்று பொருக்கென எழும் தலைவனும் உளன்' என்று ஒரு பாடலில் கூறப்படுகிறது. அரசர் களத்தில் இறக்காமல், நோயால் இறந்துபடி னும், தமது ஆசைத்தன்மையை மறந்து அவர் வாளாற் படாத குற்றம் அவரிடத்தினின்றும் நீக்கவேண்டி அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்கு வேதத்தையு முடைய அந்தணர், நல்ல பசிய தருப்பைப் புல்லிலே கிடத்தி, நல்ல பூசலிலே பட்ட வீரக்கழலினையுடைய வேந்தர் செல்லும் உலகத்திலே செல்கவென்று வாளோக்கி யடக்கும் உயர் கொள்கையை அக்காலத் தமிழ்மக்கள் கொண்டிருந்தனர் எனப் புறநானூறு காட்டுகிறது. கொடைச் சிறப்பு ஆய்: ஆய் அண்டிரனுடைய அரசவையில் ஆடச் செல்லும் மகள் அணுகினல்லது, பெருமை பொருந்திய அரசர் அணுகுதல் அரிது. பிறர்க்கீயாது தாமே தமித் துண்டு தம்வயிறு நிரப்பும் ஏனைச் செல்வர் மனைகளிற் காணப்படும் ஆரவாரமும், பொலிவும், தன்பாலுள்ள களிறனைத்தையும் இரவலர்க்கு நல்கி இழையணிந்த மகளிரொடு புல்லிதாய்த் தோன்றும் ஆய் அண்டிரனது திருமனைக்கண் காணப்படா' என்றும், அவன் இரவலர்க் இத்த யானைகளின் எண்ணிக்கை, வானத்தில் பூக்கும் விண் மீன்களின் தொகையையும், கொங்கர்ப்போரில் பகைவர் புறங்கொடுத்து ஒடுமாறு ஆய் விடுத்த வேல்களின் 49. புறநானூறு; 89 : 5-9, 50. † : 93 : 4-11. 51. # I 127 : 3-10. 52. 5-9 : 129 תל.