பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317 எண்ணிக்கையையும் எஞ்சி நிற்பதாகும். இம்மைச் செய். வன மறுமைக்காகும் என்ற எண்ணத்தையுடையவன் ஆய் அலன். மன்றத்தின் கண் பரிசிலரைக் காணின் கன்றுடனே கறை பொருந்திய அடியையுடைய யானையை அணி யணியாகச் சாய்த்துக் கொடுக்கும் மலைநாடன். தன்னைப் பாடிவருநர்க்குப் புரவியும். களிறும், தேரும், தன்னுடைய ஊரும் முதலான யாவற்றையும் தயங்காது. கொடுப்பவன் என்று ஆயினது கொடைத்தன்மை பல பாடல்களில் பேசப்படுகின்றது. அதியமான் நெடுமானஞ்சி சி றி ய இலைகளைக் கொண்ட தீஞ்சுவைமிக்க நெல்லியை உண்டவர் நெடிது வாழ்வர் என்று உணர்ந்: திருந்தும், தான் உண்டு வாழ எண்ணாது, தன்னுடைய, புலவர் ஒளவைக்கு ஈந்த பெருந்தகையாளன். சிறிய அள வினையுடைய மதுவைப் பெறின் எங்களுக்கே தருவன்; பெரிய அளவினையுடைய மதுவைப் பெறின் அதனை யாம் உண்டு பாட, எஞ்சியதைத் தானுண்பான்; மிக்க அளவினை யுடைய சோற்றினை அன்போடு கூடிய ஊன்தடியுளதாகிய இடமுழுதும் எங்களுக்கு அளிப்பன்' என்று ஒரு பாட லிலும், மற்றொரு பாடலில், யான் அவன்பால் அணுகின், என் இடையிலிருந்த பழமையான நீர்ப்பாசிபோல் சிதர்ந்: திருந்த ஆடையை நீக்கி, அழகிய பகன்ற மலர் போன்ற புத்தாடை கொடுத்து, களிப்பினைத் தரும் கள்ளோடும், அமிழ்து போன்ற சுவையுடைய ஊன் துவையலோடு கூடிய சோற்றை வெள்ளியாலாகிய வெள்ளிய கலத்தே பெய்து 53. புறநானூறு; 130 : 3-7. 54. 5 : 134 : 1-4. 55. .. 135 : 10-13. 56. 5, 1 240 * 1–3. 57. 3 * 61 : 9-11. 58. 3 or 235 *. 1-6 Li