பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 உண்பித்ததோடு, ஊர்க்கு முன்னிடமான மன்றத்தில் தங்கி யிருந்த உழவெருதுகளைக் கொண்டு உழுது விளைவித்த செந்நெல்லை நெற்ப்ோரோடே கொடுத்து, கொள்ளத் தக்க இப்பரிசிலைப் பெற்றுக் கொள்க என்று சொல்லிக் கொடுத்தான் 9 என்று அ தி ய னி ன் கொடைத் தன்மையைப் புகழ்ந்துரைக்கின்றார். நாஞ்சில் வள்ளுவன் நாஞ்சில் நாட்டையாண்ட வள்ளுவனைக் கூறுமிடத்து, ஒளவையார், வளையணிந்த கையையுடைய விறலியர் மனைப் பக்கத்தின்கண் பறித்த இலைக்குமேல் தூவுவதாக, யாங்கள் சில அரிசி வேண்டினேமாக, உடனே அவன் எம் வறுமையைப் பார்த்தலேயன்றித் தனது மேம்பாட்டையும் சீர்தூக்கி, பெரிய அரண் சூழ்ந்த மலைபோல்வதொரு யானையை யளித்தான்,89 என்று கூறுகிறார். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் இவன் தன்னை நாடி வருநர்க்கு மலைபடு பொருளும், கடல்படு பொருளும் கலந்து அளக்கும் தன்மையன் என ஒரு பாடல் அறிவிக்கின்றது. செல்வக்கடுங்கோ வாழியாதன் இரவலரது சிறுமை கண்டு இகழ்ந்து நோக்காது, தன் பெருமையும், தகுதியும் நோக்கி, மலைபோன்ற களிறு களும், கொய்யப்பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும், மன்றிடம் நிறைந்த ஆனிரைகளும், மனைக்கண் இருந்து பணிபுரியும் க ள ம ரு ம் நெற்போர்க்களங்களுமாகிய 59. புறநானூறு, 390 : 13.23. 60. H. :) 140 :-3-8. 61. 7-9 : 343 ג פ.