பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320. + சுற்றத்தார் உண்ண, அவன் மார்பிலணிந்த பல மணிகள் விரவிக் கோக்கப்பட்டு ஒளிவிளங்கும் மாலையும், அவன் மேனிக்கண் கிடந்து விளங்கும் பூ வேலை செய்யப்பட்ட உடைகளையும் அவன் புகழ் எங்கும் பரவ நல்கினான் 65 சேரமான் வஞ்சன். இங்ங்னம் சேர மன்னர்கள் அனைவரும், வீரத்திலும், மானத்திலும் சிறந்து விளங்கியது மட்டுமன்றி, கொடை யிலும் மேம்பட்டிருந்தனர் என்பது புறநானூறு காட்டும் உண்மை. இயற்கை வருணனை புறக்கருத்துகளைக் கூறும் புறநானூற்றில் இயற்கை யைப் பற்றிய வருணனைகளும் ஆங்காங்கே இ ட ம் பெறுகின்றன. அகப்பாடல்களில் இயற்கை வருணனை இடம் பெற்ற அளவிற்குப் புறப்பாடல்களில் அவ்வளவாக இடம்பெறவில்லை என்பர் அறிஞர். 6 ஞாயிற்றின் தோற்றமும் மறைவும் கடற்கண் தோன்றும் ஞாயிறு, பின்னும் வெளிய தலைபொருந்திய திரையையுடைய மேல் கடற்கண்ணே மூழ்கும்.87 அன்றியும் பகற்பொழுதைத் தனக்கெனக் கூறு. படுத்தியும், திங்கள் மண்டிலத்திற்கு முதுகிட்டுப் போயும், தெற்கும் வடக்குமாகிய இடங்களில் மாறிமாறி வந்தும், மலையின் கண்ணே வெளிப்படாது காத்தும், அகன்ற பெரிய ஆகாயத்தின் கண்ணும் பகற்பொழுது பல கிரணங். களையும் பரப்பியும் தன் கடனைச் செவ்வனே ஆற்றி வருவது ஞாயிறு என ஒரு பாடல் பகருகின்றது.

65. புறநானூறு; 398 : 16-29. 66. Dr. M. Varadarajan; The Treatment of Nature in. Sangam Literature: p. 14. 67. in 5 2 : 9-10. 68. 7-10 : 8 תת. o