பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321 மான் பிணைகள் உறங்குதல் சிறிய தலையையுடைய மறிகளையுடையவாகிய பெரிய கண்ணையுடைய மான்பிணைகள், அந்திக் காலத்தே அந்தணர் செய்தற்கரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும் முத்தீயாகிய விளக்கின்கண்ணே, பொற்சிகரங்களையுடைய இமயமலையும், பொதியின் மலையும் போன்று துயிலு கின்றன." மற்றொரு பாடல், நரந்தையையும் நறிய புல்லையும் மேய்ந்த கவரிமா, குவளைப் பூவையுடைய பசிய சுனையின் நீரை நுகர்ந்து, அதன் பக்கத்தவாகிய தகர மரத்தினது குளிர்ந்த நிழலின்கண் தனது பிணையுடனே தங்கும் என்று மான்கள் இணையாக இருப்பதைக் கவின் பெறக் காட்டுகின்றார் ஒரு புலவர். நால்வகை நில வருணனை முரிந்த வளையை யொப்ப மலர்ந்த வெண்காந்தட் பூ இலை தழைத்த குளவியுடனே நாறும் மலைச்சாரற்கண் மறத்தையுடைய புலி சீறி நிற்கும்போது, எதிரில் மானினம் நில்லாது ஒடும். வரம்பைச் சேர்ந்து வளையும் நெற் கதிர் சுழலும் கழனியொடு மிக்க நீர்ப்பாக்கத்தையுடையது மருதநிலமாகிய நாடு. இங்கு நிலத்தின்கட் குளிர்ந்த பண்டத்தையுடைய சகடத்தினது ஆழ்ச்சியைப் போக்கு வதற்குப் புனல் கொழிக்கப்பட்ட மணல் பரப்பவும், கல் பிளக்கவும் நடக்கவல்ல மிக்க மனச்செருக்கினையுடைய பகடுகள் நிரம்ப உள்ளன. குளிர்ச்சியையுடைய நீரை யுடைய துறையின்கண் பகன்றையினது தேனைப் பொருந் 69. புறநானூறு; 2 : 2 1–23. 70. 3 : 132 : 4-6. 71. 1-3 : 90 כת. 72. 19-20 : 98 נג. 73. 7-9 ,: 90 נג. சே. செ. இ-21