பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 திய பெரிய மலர்கள் பூத்துள்ளன. காடுகளில், நெடுங் கோட்டினையுடைய யானைகள் மிகுந்து இருக்கும். 5 சுரத்தின் வழியோ ஞாயிறு சுடப்பட்டதாக வெம்மை மிகுந்த வழியாக உள்ளது. அகன்ற புனத்தின்கண் கிளி மருவியுள்ளது. நெய்தல் நிலமாவது கடலும், கடலைச் சார்ந்த இடமுமாகும். கடல் நீரின் கீழே மீன்கள் உலவு வதாகவும், நீரின் மேற்பரப்பில் குவளை யுந் தாமரையு மாகிய மலர்கள் மகளிர் கண்போன்று மலர்ந்திருப்ப தாகவும், கழிகால்களாற் சூழப்பட்ட நெல் விளைந்து கிடக்கும் வயலின் கண், அரித்த ஒசையையுடைய பறையை முழக்குவதால் கதிர் கவரவரும் கிளி முதலிய புள்ளினங்கள் வெருட்டியோட்டப்படுவதாகவும், நீர்மிக்க கடற்கரைக் கண் குவியும் மணலையள்ளித் துவும் குளிர் காற்றினால் மெல்லிய சிறகுகளோடு கூடிய புள்ளினங்கள் நீந்திச் செல் வதாகவும் ஒரு பாடலில் மாங்குடிகிழார் குறிப்பிடு கின்றார்.18 மீனினங் கலித்த துறை79 என்றும் மற்றொரு பாடல் குறிக்கின்றது. யானை வருணனை களிற்றைப் பற்றிய வருணனை புறநானூற்றில் அகல இடம் பெற்றுள்ளது. நீறு படிந்த நறிய கபோலத்தை யுடைய பூவேலை செய்யப்பட்ட பட்டமணிந்த பருத்த கழுத்தையுடையவாய் வேறு வேறாகப் பரந்து சென்று வேந்தர்களுடைய காவற் காட்டின் அயலிடத்தே பரவி யுலவும் உயர்ந்த கோடுகளையும், பெரிய சருச்சரை பொருந்திய பெரிய கையையுடையவாய் திருந்திய தொழில் 74. புறநானூறு 235 : 18. 75. 4 : 131 גג. 76. 136 ככ p. 18. 77. : E 138 : 9. 78. 5 : 396 : 1-6. 79. 3 .3 138 נג.