பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யவல்ல் யானைகள் என்று ஒரு ւու-թյւն,** மற்றொரு பாடல், • அசைந்த பெருங்கையுடனே தலையெடுத்து நடக்கும் உயர்ந்த நடையையுடையனவும், அந்நடைக்கேற்ப ஒன்றற்கொன்று மாறுபட்டொலிக்கும் மணியுடனே உயர்ந்த கோட்டினையுடையனவும், பிறை வடிவாக இடப் பட்ட மத்தகத்துடனே சினம்பொருந்திய பார்வையுடை யனவும், பரந்த அடியுடனே பரிய கழுத்தையுடையனவும், தேனழிந்த மலைபோல தேனியொலிக்கும் மணநாறும் மதத்துடனே புண்வழலை வடியும் பெரிய தலையையுடை யனவுமாகிய வலிமிக்க இளங்களிறு என்றும் யானை யைப்பற்றி அழகாக வருணிக்கின்றன. கருவூரின் வருணனை கருவூரானது சேரரது தலைநகரமாக வஞ்சியென்று வழங்கப்பட்டது. இதனைப் பற்றிக் குறிக்கையில் ஒரு புலவர், :நுண்ணிய மயிரையுடைய திரண்ட முன் கையினையும்: துாய ஆபரணத்தையுமுடைய பேதை மகளிர் வண்ட லிழைத்த சிற்றின்கட் செய்த பாவைக்கு, வளைந்த கோட்டுப் பூவைப் பறித்து, குளிர்ந்த ஆண்டொருந்தத்து நீரின்கட் பாய்ந்து விளையாடும் வானைமுட்டிய புகழினை யும், வென்றியையுமுடைய வஞ்சி என்று குறிக்கின்றார். தொண்டியின் வருணனை குலை தாழ்ந்த கோட்புக்க தெங்கினையும், அகன்ற கழனியையும், மலையாகிய வேலியையும், நிலாப்போன்ற மணலையுடைய அகன்ற கடற்கரையையும், தெளிந்த கழியிடத்துத் தீப்போலும் பூவினையுமுடைய குளிர்ந்த தொண்டி என்றும், கரிய கழியின்கண் மலர்ந்த நெய் 80. புறநானுாறு; 387: 6.11. 81. J. B. 22 :- 1-8. 82. 5 : 11 : 1-6.