பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 தலானும், தேன்நாறா நி ற் கு ம் கானலையுடைய தொண்டி88 என்றும் குறிப்பிடப்படுகின்றது. நாஞ்சில் வருணனை நாஞ்சில் வள்ளுவனைப் பற்றிப் பாடும்போது, நாஞ்சில் நாட்டின் இயற்கை வருணனையைப் பற்றிய குறிப்பு வரு கிறது. இங்கு நீர் நிறைந்த பள்ளத்தின்கண் விதைத்த வித்து நீரின்மையாற் சாவாது கரும்புபோலத் தழைக்கும்; மழையால் முகந்து சொரியப்பட்ட நீர் கோடை காயினும் மகளிர்கண் போன்ற குவளை முதலிய மலர் பூக்கும்; கரிய தாளையுடைய வேங்கை மலரின் நாடோறும் அப்பொன் போலும் பூவைச் சுமந்து மணிபோலும் நீர் கடற்கட் செல்லும்; செவ்விய மலைப் பக்கத்தையுமுடைய நாடு. மேலும் மேலே விசும்பிலிருந்து மழை பொழிந்த நீர் கடற்குட் சென்று முத்தாகும்; நறுமணம் கமழும் மலை மல்லிகையோடு கூதாளி தழைத்து விளங்க, தீவிய சுளை களையுடைய பலாமரங்கள் நிறைந்த நாடாகவும் விளங்கு வது நாஞ்சில் நாடு. புறங்காட்டு வருணனை கள்ளியையுடைய பாழிடமாகிய புறங்காட்டுள், பொந் தாகிய தான் வாழுமிடத்து, போழ்ந்தாற்போலும் வாய லகையுடைய பேராந்தை சுட்டுக்குவியென்று செத்தோரை அழைப்பதுபோலக் கூவும், எனப் புறங்காட்டின் வருண னையும் காணப்படுகிறது. போர்க்கள வருணனை *. போர்க்களமாவது, பெரிய தலைகளை வெட்டிச் சாய்த்து மூளையும் நிணமும் குழம்பிய, கண்டார்க்கு 83. புறநானூறு 17 : 9-13; 48 : 3-4. 84. , 137; 5-12. 85. 5 : 380 : 6-19. 86. 5 : 240 i 7-9; 245 : 3.