பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325 அச்சம் பயக்கும் பிணங்களாலும் குருதிப்பெருக்காலும் அவற்றைத் தின்னக் கூட்டமாகச் சுற்றியுள்ள பேய் மகளிர் நரி, பேய் முதலியவைகளாலும், காவலையுடைய பூதங் களாலும் பொலிந்து இருக்கும் எனக் குறிக்கிறது ஒரு பாடல். - வைகறை வருணனை திங்களின் நிலவொளி மறைய வெள்ளியாகிய விண்மீன் எழுந்து விளங்க, பலவகையாகக் கட்டப்பட்டு மாண்புற்ற நல்ல பெருமனைகளில், பொறிகள் பொருந்திய மயிரை யுடைய கோழிச் சேவல் விடியற்போதின் வரவறிந்து கூவ, பொய்கைக் கண் கூம்பியிருந்த பூக்களின் முகை இதழ் விரிந்து மலர, பாணர் தாம் கைதேர்ந்த சிறிய யாழை முறைமை யறிந்து இசைக்க இரவுப்போது முடிந்து வைகறைப் பொழுதாயிற்று 88 என்ற வைகறை வருணனை கருத்தைக் கவர்வதாய் உள்ளது. இவையேயன்றித் திங்களைப் பசுமையான கதிர்களை யுடையது.39 என்றும், முதலையானது கலங்குகின்ற காலள வான அளவிற்பட்ட நீருள்ளே யானையைக் கொன்று வீழ்க்கும் தன்மையது? என்றும் குறிப்புக் காணக்கிடக் கின்றது. அரசியல் செய்திகள் சேரரின் செங்கோல்: பால் தன் இனிமையொழிந்து புளிப்பினும், பகல் இருளினும், ஞாயிறு தன் விளக்க மொழிந்து இருளினும், நான்கு வேதத்தினது ஒழுக்கம் வேறுபடினும் வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரிச் _ 87. புறநானூறு 369 : 14-17. 88. 2 3 398 : 1-6. 89. 2 > 231 : 4. 90. , , 104: 2-4.