பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 சுற்றத்தையுடையவராய், ! மடியா -வுள்ளத்தையும், பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும் கொண்டவராயும், அருளையும், அன்பையும் நீக்கி பாவஞ்செய்தாரை நீங்காத நரகத்தைத் தமக்கு இடமாகக் கொள்பவரோடு பொருந்தாதவராய்,?? தித்தொழிலைப் போக்கி, கோலைச் செவ்விதாக்கி, ஆறிலொன்றாகிய இறையையுண்டு, நடுவு நிலைமையைச் செய்து, தடை யின்றாக வுருண்ட ஒளியையுடைய சக்கரத்தால் நில முழுதையும், சேரமன்னர் ஆண்டனர்.”* என்பது புறநானூறு காட்டும் நுட்பம். பகைவர் திறை செலுத்துதல் தம்மொடு மாறுபட்ட மன்னர்களிடம், தம்மிடமுள்ள பெரும்படையுடன் சென்று போர்புரிந்து அவர்களை வெற்றி கொள்வதால், பகை மன்னர்கள் தத்தம் குடிகளைக் காக்க வேண்டி, பெரும் பொருளைத் திறை யாகச் செலுத்துவர். இதனால் பெரும் புகழினை மட்டு மன்றி, பெரும் பொருளையுடைய செல்வ நாட்டையுடைய வராயுமிருந்தனர் சேரர். முரசுகட்டிலில் படுப்போர்க்கு உரிய தண்டனை குற்றந்திர வலித்துப் பிணித்த, வாரப்பட்ட வாரை யுடைய, குருதிப்பலி கொள்ளும் விருப்பத்தையுடைய, வீரமுரசம் பெரிதும் தூய்மையுடனும், பக்திச்சிரத்தை யுடனும், எண்ணெயினது நுரையை முகந்தாற்போன்ற மெல்லிய பூவையுடைய முரசு கட்டிலின் மேல் வைத் திருப்பர். வெற்றித் திரு வீற்றிருக்கும் கட்டிலின்மேல் வேறு 91. புறநானூறு; 2 : 17-20. 92. 5 : 8 : 4-5. 93. 5 * 5 : 5-7. 94. H. : 17 : 5-8. 95. 24-28 : 22 ;11-13 :387 כב.