பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327 பிறர் இருந்து உறங்குவது பெருங்குற்றமாகக் கருதப்பட்டு, அவ்வாறு செய்வோர் கொலைத் தண்டனைக்குரியராவர் என்றும் விதிக்கப்பட்டிருந்தது. எனவே வெற்றிக்கு அடிகோலும் வீரமுரசம் சேரரது ஆட்சியில் புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்தமை" தெளிவு. புலவரைப் பேணும் விருப்பினன் அரசன் கன்றை மேவிய ஆனிரை மேய்ந்த காட்டிடத்தே பிறிதொன்றால் ஏதமின்றிக் கிடப்பவும், சுரத்தில் நடத்த லால் வெம்மையுற்ற காலினையுடைய வழிப்போவார் தாம் வேண்டியவிடத்தே தங்கவும், களத்தின் கண் நிறைந்த நெற்பொலி காவலின்றியே கிடப்பவும், எதிரில் நின்று தடுக்கும் பகையைத் துரந்த நிலங்கலங்காத செவ்விய ஆட்சியினையும் உடைய சேரமன்னர், தம்மை நாடி வந்த புலவர்கள், தம் புகழையும், நாட்டின் புகழையும் திந் தமிழால் பாட, உடனே அவர் பால் பெருவிருப்புக் கொண்டு, அவர்களது சிறுமையை நோக்காது, தம் உயர்வை மதியாது, புலவர்களுக்கு வேண்டுமளவு, பகைவர் தமக்குத் தந்த திறைப்பொருளை ஈந்து, அவர்களை எப்போதும் மகிழ்வுடன் அனுப்புவர்.21 இரவலர்க் கீதலை தம்மாட்சியின் ஒரு கூறாகவே கருதினர். உலகம் வறுமை யுறுதலையுடைய காலமாயினும், பாதுகாத்தலை மேற் கொண்டனர்.98 தருமமே தலைகாக்கும் என்ற தன்மை புலவர்கள் ஒரு நாள் சென்றாலும், பல நாள் தொடர்ந்து சென்றாலும் தலைநாள் போன்ற விருப்பினை யுடையவர்களாய், 9 பொருள் வேண்டி இரந்து நின்ற H 96. புறநானூறு: 50 : 5-9. 97. 5 * 230 : 1-4. 98. .גג s 103 : 99. 2. 101 : 1-3.