பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பார்ப்பனருக்கு அவருக்கு நனைந்த கை நிறையும்படி, பொற்பூவும் பொற்காசும் நீர்வார்த்துக் கொடுத்து, பசிய இழையணிந்த மகளிர் பொன்வள்ளங்களில் எடுத்துக் கொடுத்த நாரால் வடிக்கப்பட்ட சுட்டெளிவையுண்டு களித்து, இரவலர்க்கு அவர் வேண்டிய அரிய பொருள் களைக் குறைவறக் கொடுத்து, இவ்வுலகில் வாழ்வதற்கென வரையறுக்கப்பட்ட நாள் முழுதும் நன்றாக வாழ்தலாகிய நல்வினையன்றி, இறக்கும்போது உயிர்க்குத் துணையாவது வேறே யாதும் இல்லை100 என்ற உயர் கொள்கை யுடையவராயிருந்தனர். எனவே சேரர்களது அரசாட்சி, வீரத்துக்கும், செங்கோன்மைக்கும், நடுவுநிலைமைக்கும், கொடைத் தன்மைக்கும் இலக்கணமாக இருந்தது என்று புறநானூறு வரலாற்றுக் குறிப்புகள் புறநானூற்றிலுள்ள சேரரைப் பற்றிய பாடல்களுள் பழைய வரலாற்றைப் பற்றிய குறிப்புகள் அருகிலே காணப்படுகின்றன. பெருஞ்சோற்று தியன் சேரலாதன் சேரமான் பெருஞ்சோற்றுதியன் ேச ர ல ா த ன், அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்ட வருடனே சினந்து, நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந்தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கண் பட்டபோது, பெருஞ்சோறாகிய மிக்க உண வை இரு படைக்கும் வரையாது வழங்கினான்' என்றதாகக் கு றி ப் பு, முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவரால் ஒரு பாடலில் குறிக்கப் பெறுகிறது. 100. புறநானூறு; 367.: 4-9. 101. 5 * 2 : 13-16.