பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329 அதியனின் முன்னோர் கரும்பு கொணர்ந்தனர் அதியமான் நெடுமானஞ்சியைப் புகழ்ந்து பாடும் ஒளவையார், தேவர்களைப் போற்றி வழிபட்டும், அவர் களுக்கு வேள்விக்கண் ஆவுதியை யருந்துவித்தும், பெறு தற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத் தினின்று இவ்வுலகத்தின்கண் கொண்டுவந்து தந்தும், கடலுக்குப்பட்ட நிலத்தின் கண்ணே சக்கரத்தை நடாத்திய பழைய நிலைமை பொருந்திய முறைமையுடைய குடியிற் கண் தோன்றினவன் அதியமான்' என்று குறிக்கின்றார். இங்ங்னமே அதியனின் மகன் அதியமான் பொகுட் டெழினியைப் பாடும்போதும், கடற்கு அப்புறத்ததாயுள்ள நாட்டிலுள்ள பெறற்கரிய அமுதம் போன்ற கரும்பை இந் நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித் தோன்றல் 198 என்று கூறு வ தி னி ன் று ம், அதியனின் முன்னோர் வேற்று நாட்டினின்றும் கரும்பு கொணர்ந்த வரலாறு நமக்குப் புலனாகின்றது. எழுவரை வென்ற அதியன் பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழலினையும், பெரிய பனந்தோடாகிய தாரினையும், ஏழிலாஞ்சினையையும் பெற்ற அதியமான் நெடுமானஞ்சி, போரை விரும்பி யொலிக்கும் ஒசைபொருந்திய முரசினையுடைய பகையரசர் எழுவரும் தன்னொடு போர்புரிய எதிர்த்துவந்தபோது, தான் ஒருவனே நின்று போரின் கண் வென்று தன் ஆற்றலைத் தோற்றுவித்தான். இவ்வாறு பெருஞ்சிறப்பெய்தியும் அமையாது கோவலூர்மேற் படையெடுத்துச் சென்று அதற்குரிய வேந்தனை வென்று வாகை சூடினான். * 102. புறநானூறு: 99 : 1-4. 103. 55. 392 : 19-21. 104. 8-11 :"99 ג ת.