பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330. பரணர் பாடினார் இவ்வென்றியை யறிந்த ஆசிரியர் பரணர் அவனுடைய போர் வெற்றியை அழகொழுகும் தமிழாற் பாடிச் சிறப் பித்தார். 1 Ο 5 ஆய் அண்டிரன் ஆய்அண்டிரனது யானைக்கொடைச் சிறப்பைப் பற்றிக் கூறும் ஒரு புலவர், நீ கொடுத்த தலைமையையுடைத் தாகிய யானையை யெண்ணின், நீ கொங்கரை மேற்கடற். கண்ணே ஒட்டப்பட்ட நாளில் அவர் புறங்கொடுத்தலால் தம்மிடத்தினின்றும் பெயர்த்துப் போகப்பட்ட வேலினும் பலவாகும் என்று கூறுவதால், ஆய் அண்டிரன் கொங்கரோடு போர் புரிந்து, அவரை மேற் கடற்கண்ணே புறங்கொடுத்து ஒடச் செய்தான் என்பது புலனாகும். நாட்டின் எல்லை தெற்கே கன்னியாகுமரியும், வடக்கே இமயமும், கிழக்குத் திசையும், மேற்குத் திசையும் கடலாற் சூழப்பட்ட எல்லையாக, நடுவுபட்ட நிலத்துக் குன்றமும், மலையும் காடும், நாடும் என இவற்றையுடைத்ததாய் சேரர் காலத் தமிழகம் விளங்கியது. 97 என ஒரு பாடல் அறிவிக்கின்றது. கருவூர் கருவூர் சேரருக்குச் சொந்தமான தலைநகரம். இது வஞ்சி யென்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. இவ்வூரின் மதிலைச் சுற்றி ஆன் பொருநை என்னும் ஆறு ஒடின தாகவும், வானை முட்டிய புகழினையும், வென்றியையு 105. புறநானூறு, 99 : 1.1.12. 106. 5-7 : 130 גם. 107. 5 : 17 a 1-4.