பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331. முடைய ஊராகக் கருவூர் விளங்கியது19 என்றும் ஒரு. பாடல் அறிவிக்கின்றது. தொண்டி குளிர்ந்த தொண்டியானது குலைதாழ்ந்த கோட்புக்கதெங்கினையும், அகன்ற கழனியையும், மலையாகிய வேலியையும், நிலாப்போன்ற மணலையுடைய அகன்ற கடற்கரையையும், தெளிந்த கழியிடத்துத் தீப்போலும் பூவினையுமுடையதாய்ச் சேரர் ஆட்சிக்குட்பட்டதாய் 99 விளங்கியது. நாஞ்சில் அங்ங்னமே நாஞ்சில் மலையும், நாஞ்சில் நாடும் சேரற். குரியதாக இருந்தது. செவ்விய மலைப்பக்கத்தையுடைய நாஞ்சிலில் பொன்போலும் பூவைச் சுமந்து, மணிபோலும் நீர் கடற்கட் செல்லும் எனக் குறிக்கப்படுகிறது. சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர மன்னனாகிய இவன், ஒரு பொழுது சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது, போர் முடிவில் சோழனால், சேரன் பற்றுக்கோட்பட்டு, குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான். அவ்வாறிருக்கையில் ஒரு நாள் சேரமான் நீர்வேட்கை யுற்றுக் காவலர்களை நீர் கொணருமாறு பணித்தான். அவர் அவன் பணியை அவமதித்துச் சில நாழிகை. கழித்துக் கொணர்ந்து கொடுக்க, அதையுண்ணாது குழவியிறப்பினும்' என்ற பாடலைப் பாடிவிட்டு உயிர் துறந்தான் என்ற செய்தி குறிக்கப் பெறுகிறது. 108. புறநானுாறு; 11 : 5-6. 109. .9-13 . 17 י ל. 110. 10-12 : 137 ל ג. 111. 5 : 74 : 1-7.