பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 1முராணக் குறிப்பு மேற்காட்டிய வரலாற்றுக் குறிப்புகளினுாடே, பால் போலும் பனி பிறை ஆதல்போலப் பொலிந்த திருமுடி யினையும், நீலமணி போலும் கரிய திருமிடற்றினையு முடையவன் சிவன் 12 என்ற புராணக்குறிப்பும் காணப் படுகிறது. சேரரின் துறைமுகம் முசிறி சேரர்களுக்குத் தலைசிறந்த துறைமுகமாக முசிறி விளங்கியது என்றும், அத் துறைமுகத்தில் வெளிநாட்டுப் பொருட்கள் பலவும் கப்பலின் மூலம் வந்து இறங்கிச் சேர நாட்டின் வாணிபத்தைச் சிறப்புறச் செய்தது என்றும் ே ஒரு பாடலில் குறிக்கப்படுகிறது. கவிதைச் சிறப்பு விளக்க ஓவியம்: மன்னன் ஆட்சியைக் கூறும்போதும் , இயற்கையைப் பற்றிய வருணனைகளைச் சித்திரிக்கும் போதும், வரலாற்றுக் குறிப்புகளைத் தரும்போதும், உவ மைகளைக் கையாளும்போதும், புலவர் பயன்படுத்தும் அடி கள் பல நம் உள்ளத்தைக் காந்தம்போல், கவர்ந்து இழுக் கின்றன. ஒழுங்கான நுண்ணிய மயிரையுடைய திரண்ட முன்கையினையும், துாய ஆபரணத்தையுமுடைய பேதை மகளிர், கோடேந்திய அல்குலினையும், குறிய வளை களையுமுடைய உரிமை மகளிர், மான்போன்ற மருட்சி பொருந்திய கண்ணர் என்று வருணித்துக் கூறுமிடத்துப் பெண்ணையும், சிறிய தலையையுடைய மறிகளையுடைய 112. புறநானூறு, 91 : 5.6. 113. 10-11 : 343 כל. 114. 5 5. 11 : 1. 115. 4 : 240 ;2 : 11 תל. 116. 5 5. 374 : 10.