பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 வாகிய, பெரிய கண்ணையுடைய மான்பிணைகள்.117 எனும்போது, மானின் தோற்றத்தையும், கோடு முற்றிய கொல் களிறு, கருமையான கண்களுடைய களிறு 19 இரும்புபோன்ற முகத்தையுடைய கருமையான கைகளை யுடைய கொல்லுங்களிறு 120 எனும்போது, பெரிய யானையின் தோற்றத்தையும், குற்றந்தீர வலித்துப் பிணித்து வாரப்பட்ட வாரையுடைய, கருமரத்தாற்: செய்தலான் இருட்சி பொருந்திய பக்கம் பொலிவு பெற, மயிலினது தழைத்த நெடிய பீலியால் தொடுக்கப்பட்ட ஒள்ளிய பொறியையுடைத்தாகிய நீலமணி போலும் நிறத்தையுடைய தாரை, பொற்றளிரையுடைய உழிஞை யுடனே பொலியச் சூட்டப்பட்டு, குருதிப் பலிகொள்ளும் விருப்பத்தையுடைய உட்குப் பொருந்திய முரசம் என வருணிக்கும்போது, முரசின் கம்பீரமான உருவப் பொலி வையும், பசிய இழையால் தொடுக்கப்பட்ட தலைக் கண்ணியையும் மாசுண்ட உடையையும், மடித்த வாயையு. முடைய இடையன் 22 எனும்போது, இடையனின் உருவத்தையும் புலவர்கள் அழகிய ஒவியங்களாகத் தீட்டிக் காட்டுகின்றனர். நெஞ்சில் அவ்வுருவங்களை அழகிய அடிகளின்மூலம் பதிய வைக்கின்றனர். கவிநயம் சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையினைக் குறுங்கோழியூர் கிழார் பாராட்டும்போது, பெரிய கடலினது ஆழமும், அகன்ற உலகத்துப் பரப்பும், காற்றி 117. புறநானூறு: 2 : 21. 118. 35 17 - 17. 119. 5 r. 14 : 1. . 120. s > 369 : 1-2. 121. | 1 . 50 : 1.5. 122. 53 54: 10-11.