பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 யங்குந் திசையும், வடிவின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்னும் சொல்லப்படுபவற்றை வரையறுத்தறியினும், நினது அறிவும், ஈரமும், பெருங்கண்ணோட்டமும் வரை யறுத்தற்கரியவை' என்று கூறுவது சுவைமிக்கதாக உள்ளது. அங்ங்னமே, அவன் நாட்டில் சோறு படைக்கும் நெருப்புடனே, செஞ் ஞாயிற்றினது வெம்மையல்லது வேறு வெம்மையை மக்கள் அறியார்; ' இந்திர வில்லல்லது பகைவரது கொலைவில்லை யறியார்; ' கலப்பையல்லது வேறு படைக்கலமும் அறியார்; அவனுடைய நாட்டின் கண் வேட்கை நோயுற்ற பெண்டிர் விரும்பி ஊன் உண்ணினல்லது பகைவர் உண்ணப்படாத பெறுதற்கரிய மண்ணையுடையவர் என்று, அவன் ஆட்சி போரற்று, எதிர்க்கும் பகையின்றி, அமைதியான ஆட்சியாக விளங் கியது என்றும், அவன் நாட்டுப் பெண்கள் தம் கணவருடனே சேர்ந்து இன்பமான இல்லற வாழ்வை நடாத்தியதால் மகப் பேறுற்று, வாழ்வின் பயனை நுகர்ந்தனர் என்றும் மிகவும் நயமாகக் கூறுவது படித்து இன்புறற்குரியது. ஒருசொல் பல பொருள் கோதையுடைய மார்பிற்கணிந்த கோதையானும், அக்கோதையைப் புணர்ந்த மகளிர் சூடிய கோதை யானும், 28 என்று சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடும்போது கோதை' என்ற ஒரு சொல்லையே திரும்பத் திரும்பக் கையாள்கிறார். 123. புறநானூறு, 20 : 1.5. 124. 3 * 20 : 7-9. 125. 10 : ,20 ג פ." 126. - 20-3 11. . 127. 5 : 20 :, 14-15. 128. 5 : , 48: 1-2.