பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335. விறலியின் தோற்றம் மணிக்கோவையாகிய அணியாற் பொலிந்த ஏந்திய பக்கத்தினையுடைய அல்குலினையும், மடப்பத்தினையும், மையுண்ட கண்ணினையும், ஒளிதங்கிய நுதலினையு முடைய விறலி என்று அரசனிடம் பரிசில் பெற்று வரும் போது பொலிந்து தோன்றும் விறலியைக் காட்டும் புலவர், அதற்கு முன் பூப்போலும் வடிவினையுடைய மையுண்ட கண்கள் பசப்ப, தோள் மெலிய, காவினது ஒருதலைக்கண்ணே பதலை தூங்க, ஒருதலைக்கண்ணே துளையை யகத்தேயுடைய சிறிய முழாவைத் துரங்கும் பரிசு துரக்கி, இடுவோரின்மையான் ஏலாது கவிழ்ந்த என் மண்டையை இட்டு மலர்த்த வல்லார் யார் எனச் சொல்லி சுரத்திடத்தே யிருந்த, பரிசில் பெறுதற்குமுன் இருந்த வறுமை நிலையையும் காட்டுவது, சிறந்த முரண்பாடாக அமைந்துள்ளது. ஒர் அரசன் தன்னிடத்தேயுள்ள எல்லா யானை களையும், தன் உரிமை மகளிரின் எல்லா அணிகலன் களையும், தன்னை நோக்கி வந்த இரவலர்க்கு அளித்து விட்டமையான், அவன் தறிகள் களிறுகள் இலவாகிய புல்லிய பக்கத்தையுடையன என்றும், பிறிதோர் அணிகலமு மின்றிக் கொடுத்தற்கரிய மங்கலிய சூத்திரத்தை யணிந் திருந்தனர். மகளிர் என்றும் கூறுகிறார். எனவே மங்கல நாணாகிய தாலி எந்நாளும் கழற்றப் படாதது என்பது நயமாகக் கூறப்படுவது காண்க! மற்றும், அவனது ஊர்ப்பொதுவின்கண் பலவினது பெரிய கோட்டின்கண் வாழும் மந்தி பரிசிலர் துரக்கி வைக்கப்பட்ட மத்தளத்தினது ஒசை இனிய தெளிந்த கண்ணைப் பலாப்பழமென்று கருதித் தட்டினவிடத்து, அதன்கண் வாழும் அன்னச் சேவல்கள், அவ்வோசைக்கு 129. புறநானூறு; 89 : 1.2. 130. 1-4 : 103 , ג ת. 131. 5 : 127.:5: .