பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 மாறாக எழுந்து ஒலித்தன என்று கூறுவது நகைப்பிற். கிடமாக இருத்தலோடு, படித்துச் சுவைத்தற்கினிய கற்பனையாகவும் இருக்கிறது. இன்னொரு பாடலில், இதே புலவர், மன்னன் வருபவர்க்கெல்லாம், யானையைப் பரிசாகக் கொடுத்த லான் நினது நாட்டின் கண் இளைய பிடி ஒரு கருப்பத்தில் பத்துக் கன்று பெறுமோ என்று வியந்து கேட்கிறார்.' யானை ஒரு சூலுக்கு ஒரு கன்றுதான் ஈனுமேயன்றிப் பல கன்றுகளை யினாது; யானைகளின் தொகை மிகுதி கண்டே இவ்வாறு கூறுகிறார். அன்றியும், வடதிசைக்கண் இமயமலையும், தென் திசைக் கண் ஆய்குடியும் இல்லையாயின், இந்தப் பரந்த, இடத்தையுடைய உலகம் கீழ் மேலதாகிக் கெடும் 4 என்று கூறுவதும் அறிந்து இன்புறத்தக்கது. நெஞ்சைப் பிணிக்கும் சொற்கள் சேரமான் மாந்தரஞ்சேர விரும்பொறை மறைந்த வுடன், ஒரு புலவர் உலகிற்குக் காவலாகிய வெண் கொற்றக்குடை கால் துணிந்து உலறவும், காற்றுப்போலும் இயலையுடைய மனஞ் செருக்கிய குதிரைகள் கதியின்றிக். கிடக்கவும், தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்து. தேவருலகம் சென்றானே-35 என்றும், அதியனின் பிரிவை யாற்றாத ஒளவையார், அவனை யின்றிக் கழிகின்ற. மாலையும், காலையும் இனி இல்லையாகுக. 138 என்றும், கூறும் சொற்கள் நம் நெஞ்சைப் பிணிக்க வைப்பதோடு, . நம்மையும் அவர்கள் பிரிவிற்குக் கண்ணிர் விடுமாறு. செய்கின்றன. 132. புறநானூறு; 128 : 1.4. 133. 5 * 130 : 1-2. 134. 7-9 : 132 נת. 135. H. : 229 : 20–24. 136. E. :) 232 : 1-2.