பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 விடியற் காலமென்று பகர்வதும் மிகச் சிறந்த உள்ளங் கவர் அடிகள் என்பதில் ஐயமில்லை! உவமைகள் புறநானூற்றில் சேரர்களைப் பற்றிக் குறிப்பு வரும் பாடல்கள் 74 ஆகும். இவற்றில் ஏறத்தாழ 73 உவமைகள் அமைந்திருக்கக் காணலாம். உவமைகள் பல திறத்தன. சொல்லவந்த கருத்தை எடுத்து விளக்குவன. கவிதைச் சிறப்பினை மிகுவிப்பன. இந்த உண்மைகளை யெல்லாம் புறநானூற்றின் கண் அமைந்துள்ள உவமைகளில் பரக்கக் காணலாம். உவமையின் ஒரு சில கூறுகள் இங்கு விளக்கப் படுகின்றன. இயற்கையும் மன்னனும் அணுச்செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தடவிவரும் காற்றும், அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும், அத்தியோடு மாறு பட்ட நீருமென ஐவகைப்பட்ட இயற்கையினது தன்மை போல, மன்னன் பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்குமளவு அல்ல வாயின் 145. புறநானுாறு; 392 : 3. 146. 5 : 2 : 1-8; 5 : 1; 8 : 1-10; 13 : 14; 13 : 5-7; ; 14 : 17-19; 17 : 14-23; 17 : 33-39; 22 : 5–6; 22 : 10-12; ; 22 : 14-17; 22 : 14-17; 22 : 22–23; 50 : 6-7: 50 - 12; 53 : 1: 54 : 13-14; 65 : 6-11; 87 : 3-4; 89 : 5-6; 90 : 1; 90 : 10; 91 : 5–7; 94: 1-3; 94 : 4-5; 100 : 7-8; 101 : 6-8; 102 : 6-7; 102 : 5–6; 104 : 3-4; 127 : 1; 129 : 69; 132 : 3; 133 : 5-7; 135 : 5; 136 : 1-5; 136 : 13; 137 : 8: 137: 10; , 137:11;