பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339, அவரை யழித்தற் குசாவும் உசாவினது அகலமும், அவரை யழித்தற்கேற்ற மனவலியும், சதரங்க வலியும், அவ் வாற்றால் அவரை யழித்தலும், அவர் வழிபட்டால் அவர்க்குச் செய்யும் அருளுமுடையவனாயிருத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே நிலம் பொறுமைக்கும், ஆகாயம் சூழ்ச்சிக்கும், வலிக்கு வளியும், தெறலுக்குத் தியும், அளிக்கு நீரும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.' யானை பிடித்தலும், பகைவர் நாடு பிடித்தலும் யானைவரும் வழியில் சூழ்ந்த பள்ளஞ் செய்து அதன் மேல் மெல்லிய கழிகளைப் பரப்பி, மணலைக் கொட்டி பொய்யே நிலம்போலத் தோன்றச் செய்து, அதன் மூலம் குழியை யறியாது வீழ்ந்த யானையைப் பின்னர் பழகிய யானைகளைக் கொண்டு அதனைப் பிணித்துக்கொள்வது போல், மன்னர் தம்முடைய பகையரசனைச் சூழ்ச்சியால் வெல்லுதலோடு, முன்பு அவரால் அழிக்கப்பட்டுப் பின்பு தம்மரசு வெளவாது அவரது வரவு பார்த்திருந்த அரசரைத் தம்முடன் சேர்த்துக்கொண்டு, அவர்களின் உதவி கொண்டு பகையரசரை வென்று அவன் நாட்டைப் பிடித்தல் வேண்டும் என்று கூறுவதால் பழகிய யானை களைக் கொண்டு சூழ்ச்சியால் யானையைப் பிணித்தலை, 138 : 11; 139 : 13-15; 207 : 8–11; 210 : 14-15; 211 : 1-6; 229 : 27: 230 : 7-9; 230 : 12–16; 23.1 : 1-2; 231 : 5; 23.1 : 6; 235 ; 18-20; 315 : 4-8; 315 : 6–7; 343 : 10–11; 367 : 1; 367 : 12-14; 369 : 1-10; 369 : 19-21: 369 : 23-27; 374 : 1-3; 375 : 1-2; 375 : 4; 375 : 13-14; 387 : 1-4; 390 : 3-4; 390 : 21-22; 392 : 1; 392 : 4-5; 392 : 13-14; 396 : 26-28; 398 : 11-11; 398 : 12. 147. புறநானூறு, 2 : 1-8.