பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பகைமன்னரைத் தான் முன்பு வெற்றிகொண்ட மன்ன ருடன் சேர்ந்து பிணித்தலுக்கு உவமையாகக் கூறப்படு &airsogs." 48 சிவனும் அதியனும் நீண்ட நாள் உயிர் வாழவைக்கக் கூடிய நெல்லிக் கனியை அதியன் ஒளவையாருக்கு அளித்தபோது, அவனை வாழ்த்து முகத்தான் அவர் பால்போலும் பிறைநுதலாற் பொலிகின்ற மேனியையும், கருமையான கண்டத்தினையும் உடைய சிவபெருமான் எந்நாளும் அழியாது இருத்தல் போல, நீயும் இவ்வுலகில் அழியாது வாழ்வாயாக’ என வாழ்த்துகின்றார். யானையும், அதியமானும் ஊரின்கட் சிறுபிள்ளைகள் தனது .ெ வ ள் வளி ய கோட்டைக் கழுவுதல் காரணமாக நீரையுடைய துறைக்கட் படியும் பெரிய களிறு அவர்க்கு எவ்வாறு எளிதாய் இனிதாகுமோ, அவ்வாறே அதியமான் எமக்கு இனியனாக உள்ளான். மற்று அதனுடைய அணைதற்கரிய மதம்பட்ட நிலைமை எவ்வாறு இன்னாதாம் அதுபோல, அவன் பகைவர்க்கு இன்னாதான் என்று கூறுவதால், மதம் பிடிக்காத யானையின் தன்மை அதியமான் புலவர்களிடம் காட்டும் இனிய தன்மைக்கு உவமையாகவும், மதம் பிடித்த யானையின் இன்னாத தன்மை, அதியமான் பகைவர்களிடம் கொள்ளும் சினத்தின் தன்மைக்கும் உவமையாகக் கூறப்படுகின்றன. 80 148. புறநானூறு; 17 : 14-13. 149. 5-7 : 91 ת כ. 150. , 94 : 1-5.