பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி 3 பத்துப்பாட்டு சங்க நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டில் சேரர் களைப் பற்றிய செய்திகள் அவ்வளவாக இடம்பெறவில்லை எனலாம். ஒன்றிரண்டு செய்திகளே சேரர்குறித்து அறியப் படுகின்றன. - பொருநராற்றுப் படையில், முரசுமுழங்கு தானை மூவருங் கூடி அரசவை இருந்த தோற்றம் போல' என்று முடத்தாமக் கண்ணியார் பண்டைய வேந்தர் களான சேர சோழ பாண்டியரை ஒருங்கே குறிப்பிட்டுள் ளார். நச்சினார்க்கினியரும் இவ்வடிகளின் உரையில் முரசு முழங்குதானை மூவர் சேர சோழ பாண்டியர் என்று குறிப்பிட்டுள்ளார். பெரும்பாணாற்றுப் படையிலும் கடியலூர் உருத்திரங் கண்ணனார், மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்குதானை மூவர்' என்று சேர சோழ பாண்டியரைக் குறிப்பிட்டுள்ளார். சிறுபாணாற்றுப்படையில் சேரரும் அவர்தம் தலைநகராகிய வஞ்சியும் ஒருங்கே குறிப்பிடப்பெற்றுள்ளனர். கொழுவிய மீன்துணிய நடந்து வளவிய இதழை உடைத்தாகிய செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய == 1. பொருநராற்றுப்படை, 53-54. 2. பெரும்பாணாற்றுப்படை; 32-33.