பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 வாயை உடைய எருமை, பசிய மிளகுக்கொடி படர்ந்த பலாவின் நிழலிலே மஞ்சளினது மெல்லிய இலை, தனது மயிரை உடைய முதுகைத் தடவ, எருமை முற்றாது இளைய தேன் நாறமென்று அசையிட்டுக் காட்டுமல்லிகையாகிய படுக்கையிலே துயில்கொள்ளும் மேற்றிசைக் கண்ணுள்ள நிலமாகிய சேரநாடு’’’ என்று சேரநாட்டின் இயற்கைவளம் இனிதுறக் கிளத்தப் படுகின்றது. மேற்புலத்தைக் காவல் செய்கின்ற சேரர் குடியிலுள் ளோன் பகைவருடைய வடக்கின்கண் உள்ளதாகிய நிலத்திடத்தே நிற்கும் இமயத்தின் கண்ணே வளையும் தன் விற்கொடியைப் பொறித்தவனும் கணையமரத்தை வெல்லும் திணிந்த தோளினையும் விரைந்துசெல்லும் தேரினையும் உடைய குட்டநாட்டிற்குத் தலைவன் குட்டுவன் என்றும் சேரமன்னன் பேசப்படுகின்றான். வஞ்சி வஞ்சிமாநகர் பெருகுகின்ற நீரையும் கோபுரவாயிலை யும் உடைய நகரம் என்பது சிறுபாணாற்றுப்படையால் பெறப்படுகின்றது." ༈ ཟླ-- மதுரைக்காஞ்சியில் சே ர னு ைட ய நாளோலக்க இருப்புக் குறிப்பிடப்பெறுகின்றது. - I கண்கள் வளைந்த பறையினை உடைய கூத்த ருடைய சுற்றம் சேர வாழ்த்தும் குளிர்ந்த கடல்சேர்ந்த நாட்டை உடையவனாகிய ஒள்ளிய பனந்தாரை உடைய சேரனுடைய பெரிய நாளோலக்க இருப்பில்ே +. 3. சிறுபாணாற்றுப்படை; 41-47. 4. சிறுபாணாற்றுப்படை, 47-49. 5. சிறுபாணாற்றுப்படை, 50.