பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 எல்லாக் கலைகளையும் உணர்ந்த சீரியோர் திரண்டு அவன் கேட்பத் தருக்கங்களைக் கூறி விரும்புதல் கொண்ட ஆரவாரத்தினை மாங்குடி மருதனார் குறிப்பிட்டுள்ளார்." மதுரைக்காஞ்சியில் பிறிதோரிடத்தில் பெயர் குறிப் பிடப்பெறாத சேர சோழரைப் பாண்டியன் நெடுஞ் செழியன் வென்ற செய்தி சுட்டப்பட்டுள்ளது." சேரன் செம்பியன் முதலிய எழுவரோடு மாறுபட்டு நெடுஞ்செழியன் பொருதமை நச்சினார்க்கினியருடைய உரையால் தெரியவருகின்றது." பாண்டியன் நெடுஞ்செழியனொடு பொருத எழுவர் சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் எனும் எழுவர் என்பது " ஆலங்கானத் தஞ்சுவரஇறுத்து அரசுபட அமருழக்கி முரசுகொண்டு களம்வேட்ட அடுதிறல் உயர் புகழ் வேந்தே' எ ன் ற அடிகளுக்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையால் விளங்குகின்றது. சேரரைப் பற்றிப் பத்துப்பாட்டால் நாம் அறியும் செய்திகள் இவையே ஆகும். . மதுரைக்காஞ்சி; 523-526. மதுரைக்காஞ்சி; 55-56. . நெடுநல் வாடை, 188 உரை. மதுரைக்காஞ்சி; 127-130.