பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க்கணக்கு கடைச்சங்க காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியோடு முடிவடைவதாக அறிஞர்கள் கருது கின்றனர். மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பல்லவர் ஆட்சியின் தோற்றமும் அவர்தம் ஆதிக்கமும் மேலோங்கலாயின. சங்க இலக்கியங்களில் பல்லவர் பற்றிய சிறுகுறிப்பும் கிடைக்கவில்லை; ஆதலால் பல்லவர் இந்த மண்ணில் தங்கள் ஆட்சியை நிறுவும் முன்னரே சிறப்பு வாய்ந்த தமிழ்ச்சங்கம் செயலற்றுப்போனது என அறிகின்றோம். ஏறத்தாழ கி. பி. 250 அளவில் தமிழர் களுடைய வரலாற்று நிலையைப் பற்றி அறிந்துகொள்ள இயலாத வண்ணம் ஒரு பெரும் தேக்கநிலை ஏற்பட்டது. இத்தேக்கநிலை கி. பி. 6 ஆம் நூற்றாண்டு இடைப்பகுதி" வரை நீங்கவில்லை. இந்தக் காலப்பகுதி தமிழகத்தின் இருண்ட காலம்" எனக் குறிப்பிடப் பெறுகிறது. தமிழர் களின் மொழி மற்றும் பண்பாட்டிற்கு முற்றிலும் எதிரான தொடர்பற்ற நாடோடிக் கூட்டமாகிய களப்பிரர்களின் வருகையும் பல்லவப் பேரரசினுடைய ஆட்சி விரிவும் தமிழகத்தில் வடமொழி, பிராகிருதம், பாலி முதலான மொழிகள் வளர்ச்சி பெறுவதற்குத் துரண்டுகோலாய் இருந்தன. மேலும் இவை சமண, பெளத்த மதங்களும் தந்திர சாத்திர வழிபாட்டு முறையும் பரவுவதற்கு ஊக்க மளித்தன. தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சி குன்றியது. இருப்பினும் இந்த இடைப்பட்ட பகுதியில் சமண, பெளத்த மதங்களில் காணப்பட்ட நற்கருத்துகளின் விளைவாக ஏற். பட்ட விழிப்புணர்வு காரணமாகத் தமிழில் செய்யுள்