பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 வடிவிலான பல நீதி இலக்கியங்கள் தோற்றம் கொண்டன. அவற்றிலிருந்து பதினெட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாக ஆக்கினர். அத்தொகுப்பே நாளடைவில் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பெயரைப் பெற்றது. இந்தத் தொகுப்பைச் சார்ந்த நூல்கள் பாடற்பொருள், பாடல் அமைப்பு, மொழிநடை ஆகிய கூறுகளில் சங்க இலக்கியத்தினின்று மாறுபட்டு இருந்தன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பொய்கையார் என்னும் புலவரால் இயற்றப்பெற்ற களவழி நாற்பது' என்னும் நூல் போரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்நூலில் சேர அரசன் ஒருவனின் போர்த்திறம், இலக்கிய ஈடுபாடு, :ஈகைத்தன்மை ஆகியவை இடம் பெற்றுள்ளன. எனவே இவ்வியலில் களவழி நாற்பது என்னும் இந்நூல் ஆய்வுப் பொருளாகின்றது.