பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 எனவே பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் வேறு, இமயவரம்பன் தந்தையான உதியஞ்சேரல் வேறு என்பது பெறப்படும்.'

நாடுகண் அகற்றிய உதியஞ் சேரல்' என்று மாமூலனாரால் குறிப்பிடப்பெறும் சேரனே உதியஞ் சேரலாவன். இவ்வுதியன் சேரலே பதிற்றுப்பத்தின் முதற்பத்திற்குரியவனாவன். இவன் வெளியன் வேண்மான் என்னும் வேளிர்குல அரசனுடைய மகளாகிய நல்லினி என்னும் நங்கை நல்லாளை மணந்து கொண்டான் என்பது பதிற்றுப்பத்தின் இரண்டாம் பதிகத்தினால் தெரியவருகின்றது. இவ்விருவர்க்கும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். மூத்த மகனே இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆவன். இவனே இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். இளையமகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆவன். இவனே மூன்றாம் பத்தில் பாடப்படும் சேர மன்னனாவன்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவன். உதியஞ்சேரலின் மூத்த மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பதும், இளைய மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும் பதிகத்தின் வழி அறியப்படுகின்றன. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றும் இவன் அழைக்கப்படுகின்றான். குமட்டுர்க் கண்ணனார் என்னும் புலவர் இவ்வரசன்மீது 39. திரு. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பண்ட்ை நாளைச் சேரமன்னர் வரலாறு, ப. 72. 40. அகம்; 65: 5. 41. இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மான் நல்லினி யீன்றமகன்' (இரண்டாம் பத்து, பதிகம் 3-4) சே. செ. இ-3 -