பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவழி நாற்பது பழந்தமிழ் இலக்கியங்களைப் பாட்டு, தொகை, கீழ்க் கணக்கு எனப் பிரிப்பர். பத்துப்பாட்டையும் எட்டுத் தொகையையும் அடுத்துப் பதினெண் கீழ்க்கணக்கு நூல் கள் சிறப்புடையனவாகும். தமிழ்விடுதூது ஆசிரியர்,

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * -மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்' எனக் குறிப்பிடுகின்றார். பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்கினை மயிலைநாதரும், பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் தாம்தாம் எழுதிய நன்னூல், தொல்காப்பிய உரைகளில் குறித்துள்ளனர். கீழ்க்கணக்கு என்றும் நச்சி னார்கினியர் தம் உரையில் சில இடங்களில் சுட்டியுள்ளார். எனவே கீழ்க்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்குகள் பழமையானவை என்பது புலப்படும். பன்னிரு. பாட்டியல், அடி நிமிர்ந்து வரும் அகவல் முதலியவற்றால் இயன்றது மேற்கணக்கு என்றும், அடிநிமிர்வு இல்லாத வெண்பாவினால் வருவது கீழ்க்கணக்கு என்றும் கூறு கின்றது. மேலும் அது அறம் பொருள் இன்பம் பற்றித்

தமிழ்விடு தூது; 56. நன்னூல்: நூ. 387, உரை. தொல்; செய்யுள் : 470, 547 உரை. தொல்; செய்யுள் : 235 உரை. தொல்; செய்யுள் : 149, 158 உரை. அகவலுங் கலிப்பாவும் பரிபாடலும் பதிற்றைந்தாதி பதிற்றைம்ப தீறா _ மிகுத்துடன் றொடுப்பன மேற்கணக்கெனவும் வெள்ளைத் தொகையும் அவ்வகையெண்பெறின் எள்ளறு கீழ்க்கணக் கெனவும் கொளலே. - பன்னிருபாட்டியல்; 346. i