பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

திறம்படவுரைப்பது கீழ்க்கணக்கென்றும் குறிப்பிடுகின்றது.

தொல்காப்பியனார் கூறும் அம்மை' என்னும் வனப் பினுள் கீழ்க்கணக்கு நூல்களைத் தொல்காப்பிய உரை யாசிரியர்கள் அடக்கியுள்ளனர். கீழ்க்கணக்கு என்பது, வணிகர்கள் நாளும் தம் வாணிக நிலையங்களில் நிகழும் வரவு செலவுகளைக் குறிக்கும் கணக்கு என்றும், கைக்குறிப்பு (Hand book) groor Q3; காலத்து அது வழங்கும் என்றும் அறிஞர் உரைப்பர்.9 எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே என்று திருநாவுக் கரசநாயனார் வழங்கும் தொடரில் 9 கீழ்க் கணக்கு என்னும் சொல் பயின்று வந்துள்ளது. இக் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டாகும். இந்நூல்களைச் சங்கம் மருவிய நூல்கள் என்று பழைய உரையாசிரியர்கள் வழிவழி மொழிந்து வருகின்றனர். தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் தம் உரைப்பகுதியில், பதினெண் கீழ்க்கணக்கி னுள்ளும் முத்தொள்ளாயிரத்தும் ஆறடிக்கும் ஏறாமல் செய்யுள் செய்தார் பிற சான்றோரும் என்று குறிப் .பிட்டுள்ளார். நச்சினார்க்கினியரும் தம் தொல்காப்பிய


7. அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்ப மடுக்கி அவ்வத் திறம்பட வருவது கீழ்க்கணக் காகும். ட பன்னிருபாட்டியல்; 348. 18. தொல்; செய்யுள் : 235. * 19. திரு. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை; பதினெண் கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள்: தலைமையு ை, ப. 10. 10. திருநாவுக்கரசர் தேவாரம்; 5 : 21, 8. 11. நாலடி நாண்மணி நானாற்ப தைந்திணைமுப் பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம் இங்கிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைங்கிலைய வாங்கீழ்க் கணக்கு' - * 12. தொல்; செய்யுள் : 175.