பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351 உரையில் நெடுநல் வாடை அடிகளை எடுத்துக்காட்டி அந்நூலாசிரியரைப் பிற்சான்றோர் என்று குறிப்பிடுகிறார். இவற்றால் பிற்சான்றோர் என உரையாசிரியர்கள் குறிப் பிடும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் ஆசிரியர்கள் பாட்டு தொகைகளைப் பாடியோருக்குப் பிற்பட்டவர் என்பது தெளிவாகிறது. கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச்செய்தி பற்றிக் கூறுவது களவழிநாற்பது ஒன்றே யாம். ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் பெறும் பாடல்கள் களவழி எனப்படும் என்பது தொல்காப் பிய' த்தால் அறியப்படும். நச்சினார்க்கினியர் தொல் காப்பியச் சூத்திர உரையில் களவழி நாற்பது புலவர் கள வழியைத் தோற்றுவித்தது' என்று குறிப்பிட்டு, ஒஒ உவமன்' எனத் தொடங்கும் இந்நூற் செய்யுளையும் மேற்கோள் காட்டியுள்ளார். காலத்தால் முற்பட்ட உரையாசிரியரான இளம் பூரணர் களம் பாடியதற்கு இக்களவழிச் செய்யுளையே எடுத்துக்காட்டியுள்ளார். இந்நூலில் உள்ள நாற்பது பாடல்களும் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிகின்றன. களத்து' என்று முடிவதனாலும் போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினாலும் * களவழி என்றும், பாடல் தொகை அளவினால் களவழி நாற்பது என்றும் இந்நூல் வழங்கப்பெறுவதாயிற்று. பிற் காலத்துப் பரணி நூல்களில் களம்பாடியது என்னும் பகுதி இந்நூலை ஒட்டிய வளர்ச்சியெனலாம். போர்க்களமாகிய இடத்தைச் சுட்டி எழுந்ததே இந்நூல் என்பது தண்டியலங் --_ 13. நெடுநல்வாடை; 153-156. 14. தொல்காப்பியம்; புறத்திணையியல் : 21. 15. ל ת 16. களவழிநாற்பது; 36.