பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 கார உரையாலும், இலக்கணப்பாட்டியலாலும் அறியப் படுகின்றது. வரலாற்றுச் செய்திகள் இந்நூலின் இறுதியில் காணப்பெறும் குறிப்பு பின் வருமாறு: சோழன் செங்கணானும் கணைக்காலிரும்பொறையும் போர்ப்புறத்துப் பொருது உடைந்துழி, சேரமான் கணைக் காலிரும்பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன் சிறை. வைத்துழி, பொய்கையார் களம்பாடி, வீடுகொண்ட கள வழி நாற்பது என்னும் குறிப்பு உள்ளது. இதிலிருந்து, சோழன் செங்கணான் போர் என்னும் இடத்தில் கணைக் காலிரும்பொறையோடு போரிட்டான் என்பதும், போரில் சோழன் வெற்றி பெற்று, சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறைப்படுத்தினான் என்பதும் அப்பொழுது பொய்கையார் என்பார் சோழனது வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார் என்பதும் தெரிய வருகின்றன. நூலுள் சோழனுடைய பெயர் புனனாடன் 19, நீர் நாடன்20, காவிரிநாடன் 21 காவிரிநீர் நாடன் 22, செம்பியன் என்று பொதுப்படையாகச் சுட்டப்படுகிறதே. யன்றி அவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. 17. தண்டியலங்கார உரை; 5. 18 இலக்கண விளக்கப் பாட்டியல் : 851. 19. களவழிநாற்பது : 1, 9, 10, 14, 16, 20, 25, 26, 27, 28, 31, 36, 37, 39. 20. 5 in 3, 8, 17, 22, 32, 41. 21. 2 * 7, 12, 35. 22. 5 : 24. 23. H. :) 23, 33, 38.