பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 செங்கண்மால்24, செங்கண் சினமால் என்பன சோழன் செங்கணான் பெயரைச் சுட்டியன என்று கொள்ளாமல் பூவை நிலை வகையால் சோழனைச் சேய் என்று சுட்டி யுள்ளதுபோல இங்கும் திருமாலாகக் குறிக்கப்பட்டுள்ளது என்றே கொள்ளவேண்டும் என்பர் அறிஞர். இது போன்றே சோழனோடு பொருத சேரனின் இயற்பெயர் சுட்டப்படவில்லை. ஒரே ஒரு பாடலில் வஞ்சிக்கோ?? எனக் குறிக்கப்பட்டு மற்றப் பாடல்களில் பகைவரைக் குறிக்கும் பல்வேறு சொற்களால் சேரன் குறிக்கப் பட்டுள்ளான். கொங்கரை அட்ட களத்து' என்ற தொட ரால் கொங்கர் சேரனுக்குத் துணையாக வந்து போரிட்ட செய்தி புலப்படும். சோழன் சேரனைச் சிறை செய்தான் என்ற இறுதிக் குறிப்புக்கு மாறாக * வஞ்சிக்கோ அட்டகளத்து' என்ற தொடர் சோழன் சேரனைப் போர்க் களத்தில் கொன்றதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பதின் பழைய உரையும் இத்தொடருக்கு 'வஞ்சிக் கோவைக் கொன்ற களத்து' என்று குறிப்பிட்டுள்ளது. போர் என்ற இடத்தில் இப்போர் நடந்தது என்ற நூலின் அடியில் காணப்படும் இறுதிக் குறிப்புக்கேற்பப் போர் நடந்த இடத்தைப் பற்றிய குறிப்பு நூலினுள் இல்லை ஆயினும் காவிரிநாடன் கழுமலம் கொண்ட நாள் என்ற குறிப்பால் 9 இந்தப் போரின் இறுதியில் சோழன் கழுமலம் என்ற ஊரைத் தனக்குரியதாக்கிக் கொண்டான் என்பது தெரியவரும். களவழி நாற்பதின் ஆசிரியர் பொய்கையார் களவழி நாற்பது பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுவித்தார் 24. களவழிநாற்பது; 4, 5, 11. 25. 41 ,30 ,29 ,21 ,15 ג כ. 26. பதினெண்கீழ்க்கணக்கு; எஸ். ராஜம் பதிப்பு : - பக். 406. 27. களவழிநாற்பது : 39. 28. 5 : 14. 29. து: 36. சே. செ. இ.23