பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 என்றே கலிங்கத்துப்பரணி39, மூவருலா", தமிழ்விடு து.ாது?? முதலிய பின்னுால்கள் அறிவிக்கின்றன. களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட அவனும் என்பது கலிங்கத்துப்பரணி. மேதக்க பொய்கை கவி கொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும் -விக்கிரம சோழனுலா : 19.20. அணங்கு, படுத்துப் பொறையானைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் கள விழிப் பாக் கொண்டேன் -குலோத்துங்க சோழனுலா : 19.20. நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் கால் தளையை விட்டகோன் -இராசராச சோழனுலா: 18. என வருவன மூவருலாப் பகுதிகள். தமிழ்விடுதூது, சேரமான் தன்னடிக்கு அண்டு தளை விடுத்தாய்; ஏழ் - தளைஉன் பொன்னடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ! என்று சிலேடை நயம்படக் கூறுகிறது. செய்கை அரிய களவழிப் பா முன் செய்த பொய்கை ஒருவனால் போம் தரமோ-சைய மலைச்சிறை தீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக் கொலைச் சிறை தீர் வேந்துக்குழாம்? 30. கலிங்கத்துப்பரணி: 182. 31. விக்கிரமசோழன் உலா; 14; குலோத்துங்க உலா : 18. 32. தமிழ்விடு தூது; 56.