பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355 என வரும் ஒரு பழம் பாடலை நச்சினார்க்கினியர் மேற் கோளாக எடுத்தாண்டுள்ளார். இங்ங்னம் பிற நூல்களும், தனிப்பாடலும், நூல் இறுதி யிலுள்ள குறிப்பை ஒத்து அமைதலின், பொய்கையார் களவழிநாற்பது பாடிச் சேர்மானைச் சிறையிலிருந்து விடுவித்தார் என்ற செய்தி உண்மையொடு பட்டதாகலாம். இச் செய்திக்கு மாறுபட்டதொரு குறிப்பு, குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாட்டின் பழைய குறிப்பில் காணப் படுகிறது. அது, சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணா னோடு திருப்போர்ப்புறத்துப் பொருது, பற்றுக் கோட் பட்டு, குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணிர்தா" என்று, பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண் டிருந்து, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' - என்பது. இக் குறிப்பில் பொய்கையாரைப் பற்றிய செய்தியும், சிறைவீடு கொண்ட குறிப்பும் இல்லை. களவழிக் குறிப்பிற்கு மாறாக, சேரமான் கணைக்காலிரும்பொறை சிறைக்கோட்டத்தில் கிடந்து மானத்தால் இறந்து பட்டதாகக் காணப்படுகிறது. களவழிக்குறிப்புடன் இது மாறுபட்டது அன்று என்று காட்ட முற்பட்டோரில் சிலர், துஞ்சிய' என்பதற்கு வேறு வகையாகப் பொருள். கூறலாயினர். டாக்டர் உ. வே. சாமிநாதையர் 74ஆம் புறப்பாட்டின் அடிக்குறிப்பில், துஞ்சிய என்பதற்கு மூர்ச்சித்த என்று பொருள் கொள்ளவேண்டும்போலும்!" என்று குறித்துள்ளார். மேலும், தமது சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற நூலில், துஞ்சிய என்ற சொல் இறந்த என்றபொருளையே மிகுதியும் தருவதாயினும் இங்கு 33. புறநானூறு 74.