பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 மூர்ச்சித்த என்று பொருள் கொள்ளவேண்டும்" என்று குறித் துள்ளார் என உறுதியாக எழுதியுள்ளார். இ. வை. அனந்த ராமையர், துஞ்சிய என்பதற்கு உறங்கிய என்று பொருள் கொள்ளலாம் என்பர்.' துஞ்சிய என்பது இறந்த என்னும் பொருளிலேயே மிகுதியாக வருதலின், இங்கும் இறந்த என்று பொருள் கோடலே நேரிதாம் . தமிழ் நாவலர் சரிதையில், சேரன் கணைக்காலிரும் பொறை செங்கணானால் குணவாயிற் கோட்டத்துத் தளைப்பட்ட போது பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு என்று குறிப்பிட்டு, குழவி இறப்பினும் என மேற் குறித்த புறப்பாடலைக் கொடுத்து, அதன் பின்னர், இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்' என்று அந் நூலைத் தொகுத்தவர் எழுதியுள்ளார். இதனால், இந் நூலாசிரியர் புறநானுாற்றுக் குறிப்பையும், களவழி நாற்பதின் குறிப்பையும் ஒன்றாக இணைக்க முயன் றுள்ளார் என்பதும் புலனாம். அகநானுாற்றுப் பாடல் ஒன்றில் சோழன் ஒருவன் கணையன் என்பானை வென்று கழுமலம் கொண்ட செய்தி வந்துள்ளது. இதன் பழைய உரை, நன்னன் முதலாயினார் சேரர் படைத்தலைவர்; கணையன் சேரன் படை முதலி; முன் சொன்னவர்க்குப் பிரதானி. கழுமலம் ஓர் ஊர்: என்று குறித்துள்ளது. பிறிதோர் அகப்பாடலில்?? கணையன் என்ற பெயருடைய மல்லன் ஒருவன் குறிப்பிடப் பெறுகிறான். இந்த இரு பாடல்களிலும் சுட்டப்பெறும் = * 34. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் : ப. 94. - 35. களவழிநாற்பது; அனந்தராம ஐயர் பதிப்பு, முகவுரை: ப. 12. = - 36. அகநானூறு: 44. 37. 5 386 ; ב.