பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357 கணையன் என்பானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. கணையன் அகப்படக் கழுமலம் தந்த என்பது கணைக்காலிரும்பொறையோடு தொடர்புடையது போலக் காணப்படினும் அப்பாடலில் குறித்த செய்திகள் தெளிவின்றி யிருக்கின்றன. இது களவழி நாற்பது குறிக்கும் போரைக் குறித்ததாகக் கொள்ள முடியாது. சோழனுக்கும் சேரனுக்கும் போர்நிகழ்ந்த இடமாகிய போர் என்பது பற்றித் தெரியவரும் செய்திகளை நோக்கு வோம். இந்த ஊர் சோழ நாட்டில் உள்ளது எனச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் நற்றிணைப் பாடல் ஒன்றிலும் பழையனுக்கு உரியதாகப் போர் என்ற ஊர் குறிக்கப்படுகிறது. இப்பழையன் சோழனுக்குக் கீழ்ப் பட்ட ஒரு தலைவன் ஆவன். இவனுக்கு உரியதாகக் கூறப்பெறும் போர் என்னும் ஊர் நீர்வளம் நிறைந்தது. என்பதும், சோழநாட்டில் உள்ளது என்பதும் மேற்குறித்த செய்யுட் பகுதியால் அறியலாம். திருப்போர் என்பதில் திரு என்பதை அடைமொழியாகக் கொள்ளல் வேண்டும். இங்ங்னம் கொள்ளாது திருப்போர் என்பதே ஊர்ப் பெயர் என்றும், அது திருப்பூர் என இக்காலத்து வழங்கும். கொங்குநாட்டு ஊராக இருக்கலாம் என்று கருதுவாரும் உண்டு. போர் என்னும் பழையனது ஊர் நீர்வளம் செறிந்தது என்று அகநானூற்றுப்பாடல் குறிப்பதனால், அது போர் நிகழ்தற்கு ஏற்ற இடமாதல் இல்லை. எனவே அது சேரனுக்குரித்தான ஒர் ஊராக இருத்தல் கூடும். புறப்பாடல் ஒன்றில் பழைய குறிப்பு சேரமான் 38. அகநானூறு; 326. 39. நற்றிணை; 10. 40. பதினெண்கீழ்க்கணக்கு; எஸ். ராஜம் பதிப்பு: ப. 408.