பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியொடு போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது என்று உள்ளது. இக்குறிப்பி னால் போர் என்னும் களம், சேர சோழ நாடுகளுக்கு இடைப்பட்டதாய், இரு பேரரசர்களும் வழிவழியாகப் போர் செய்தற்கு மேற்கொண்ட இடமாக அமைந் திருந்தது போலும்! குலோத்துங்க சோழன் உலாவின் பழைய உரையில், களவழி கொண்டோன் தஞ்சை விசயாலயன்" என்பது குறிக்கப் பெற்றிருக்கிறது. எனவே, விஜயாலயன் கால மாகிய கி.பி. 850 களவழிநாற்பதின் காலம் என்பர் திரு . வையாபுரிப்பிள்ளை.' மேலும் அவர் பெருங்கதையிலும் சிந்தாமணியிலும் வரும் ஒரு சில கருத்துகள் இந்நூலோடு பெரிதும் ஒத்துள்ளமையும் கவனிக்கத் தக்கது. யாவற் றையும் கூர்ந்து நோக்கின், இது பிற்காலச்சோழர் காலத்தில் தோன்றிய நூலாதல் கூடும் என்று ஊகிக்கலாம் என்பர்.4.2 ஆயினும், சோழன் செங்கணான், சேரன் கணைக் காலிரும்பொறை பொய்கையார் ஆகிய மூவரும் கடைச் சங்க காலத்தவரே என்று திரு ந. மு. வேங்கடசாமி நாட்டார்சி” அவர்களும், திரு டி. வி. சதாசிவப் பண்டாரத் தார்: "அவர்களும் கூறுவர். பொய்கையார் களவழிநாற்பது பாடியவர் பொய்கையார் என்பவ ராவர். இவரது பெயர் இயற்பெயரா, காரணப் பெயரா 41. இலக்கிய மணிமாலை; ப. 113. 42. History of Tamil Literature, p. 98. 43. களவழி நாற்பது; கழகப் பதிப்பு, முகவுரை: ப. 6. 44. தமிழ் இலக்கிய வரலாறு 1; ப. 71-72.