பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359 என்பது துணியக் கூடவில்லை. காரணப் பெயராயின், இவரைப் பொய்கை நாட்டில் தோன்றியவர் என்றோ, அல்லது பொய்கை ஊரினர் என்றோ கொள்ளலாம். சேரன் பொருட்டு இவர் களவழிநாற்பது பாடலின் இவரும் சேரநாட்டைச் சார்ந்தவராகலாம். சங்கத் தொகை நூல்களில் மூன்று பாடல்களைப் பாடியவரும் சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்பவரும் ஆகிய பொய்கையார் இவருக்கு முந்தியவராதல் வேண்டும். அப் பொய்கையார் தொண்டி என்னும் ஊரைச் சார்ந் தவர். கோதை மார்பின் கோதை யானும்...... கள் நாறும்மே கானல் அம் தொண்டி அஃது எம்ஊரே; அவன் எம் இறைவன் 15 என்பது அவர் வாக்கு. அவர் பாடிய நற்றினைப் பாடலிலும் தொண்டியைப் பற்றிய குறிப்பு உள்ளது. முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பொய்கை யாழ்வார் மேற்குறித்த இருவரினும் வேறுபட்டவர். அவர் தொண்டைநாட்டுக் கச்சிப் பதியினர். இவரே களவழி நாற்பதின் ஆசிரியர் என்பர் பேராசிரியர் மு. இராகவ ஐயங்கார். ஆனால்

  • மால் அடியை அல்லால்மற்று எண்ணத்தான்

ஆமோ இமை : எனறும,

  • திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் என்றும்,

- - 45. புறநானூறு; 48. 46. நற்றிணை; 18. 47. ஆழ்வார்கள் காலநிலை; ப. 43 48. நாலாயிர திவ்யப் பிரபந்தம் : 31. 49. 64 : ג כ.